குட் பேட் அக்லி திரைப்படம் இப்படிப்பட்ட கதையம்சம் கொண்டதா? சந்தேகத்தை கிளப்பிய பிரபலம்..

Author: Prasad
5 April 2025, 4:54 pm

வெறித்தனமான டிரைலர்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இத்திரைப்படத்தின் வரவை நோக்கி ரசிகர்கள் பலரும் ஆவலோடு காத்துக்கொண்டிருக்கின்றனர். 

இதனிடையே நேற்று இத்திரைப்படத்தின் வெறித்தனமான டிரைலர் வெளியாகியிருந்தது. அஜித்குமார் இதற்கு முன்பு நடித்த பல திரைப்படங்களின் ரெஃபரன்ஸ் இந்த டிரைலர் முழுக்க இடம்பெற்றிருந்தது. ஒரு அஜித் ரசிகராக இத்திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் உருவாக்கியுள்ளது இந்த டிரைலரின் மூலம் தெரிய வருகிறது. 

bismi said that good bad ugly movie genre is dark comedy

குறிப்பாக இத்திரைப்படத்தின் டிரைலரில் தேவாவின் இசையில் பிரபலமான பாடலாக அமைந்த ஒத்த ரூபா தாரேன் என்ற பாடலை இடம்பெறச் செய்தது ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துள்ளது. 

இப்படிப்பட்ட கதையம்சம் கொண்டதா?

இந்த நிலையில் இத்திரைப்படத்தின் டிரைலரை குறித்து தனது வீடியோ ஒன்றில் பேசிய மூத்த சினிமா பத்திரிக்கையாளர் வலைப்பேச்சு பிஸ்மி, “எனக்கென்ன வருத்தம் என்றால், அஜித் என்கிற அவ்வளவு பெரிய நடிகரை வைத்து எடுக்கிற படத்துக்கும் ஏற்கனவே ஹிட் அடித்த வேறு ஒரு இசையமைப்பாளரின் பாடல்தான் தேவைப்படுகிறதா? என்று ஒரு கேள்வி எழுந்தது” என கூறினார். 

bismi said that good bad ugly movie genre is dark comedy

மேலும் பேசிய அவர், “எனக்கு அந்த டிரைலரை பார்க்கும்போது எனக்கு ஒன்று தோன்றுகிறது. அதை சொல்லியே ஆகவேண்டும். குட் பேட் அக்லி என்று பெயர் வைத்ததற்கு மாறாக குட் பேட் அக்னி என்றுதான் இதற்கு பெயர் வைத்திருக்க வேண்டும். டிரைலர் முழுக்க குண்டு வெடிப்புகளாகவே இருக்கின்றன. டிரைலரிலேயே இப்படி என்றால் படம் முழுக்க எப்படி இருக்குமோ தெரியவில்லை. 

இந்த படத்தை ஆக்சன் படம் என்று கூறுகிறார்கள். ஆனால் எனக்கு தெரிந்து இந்த திரைப்படம் ஒரு டார்க் காமெடியாக உருவாகியுள்ளதாக தோன்றுகிறது” எனவும் அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?