கண்டா வரச்சொல்லுங்க பாணியில் வெளியான புதிய பாடல்? இது இன்னொரு கர்ணன்…
Author: Prasad1 September 2025, 6:29 pm
மாரி செல்வராஜ்ஜின் புதிய படைப்பு
“பரியேறும் பெருமாள்”, “கர்ணன்”, “மாமன்னன்”, “வாழை” போன்ற வித்தியாசமான படைப்புகளை கொடுத்த மாரி செல்வராஜ் தற்போது துருவ் விக்ரமை வைத்து “பைசன் காளமாடன்” என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தை பா ரஞ்சித், சமீர் நாயர் ஆகியோர் தயாரித்துள்ளனர். நிவாஸ் கே பிரசன்னா இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த நிலையில் இத்திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் தற்போது வெளிவந்துள்ளது.

கண்டா வரச்சொல்லுங்க பாணியில்…
“தீக்கொளுத்தி” என்று தொடங்கும் இப்பாடல் துருவ் விக்ரம் கதாபாத்திரம் தனது காதலியின் மீதான பிரிவை கூறுவது போல் அமைந்துள்ளது. இதில் துருவ் விக்ரமிற்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். நிவாஸ் கே பிரசன்னா இசையில் இப்பாடலை மாரி செல்வராஜே எழுதியுள்ளார். மாரி செல்வராஜின் கவிதையுடன் இப்பாடல் தொடங்குகிறது. இப்பாடல் “கர்ணன்” படத்தின் “கண்டா வரச்சொல்லுங்க” பாடலை ஞாபகப்படுத்துவதாக பலரும் கூறுகின்றனர்.
“பைசன் காளமாடன்” திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளிவரவுள்ளது. இத்திரைப்படத்திற்கு அதிகளவு எதிர்பார்ப்பு இருப்பது குறிப்பிடத்தக்கது. இப்பாடல் இதோ…
