மணிரத்னம் எடுத்த டுபாக்கூர் படம்? வாண்டடாக வந்து வாய்விட்ட ப்ளூ சட்டை மாறன்! 

Author: Prasad
28 June 2025, 1:12 pm

ப்ளூ  சட்டை மாறன் விமர்சனம்

விஷ்ணு மஞ்சு நடிப்பில் முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் உருவான “கண்ணப்பா” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இதில் விஷ்ணு மஞ்சுவுக்கு ஜோடியாக பிரீத்தி முகுந்தன் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் சரத்குமார், மதுபாலா, மோகன் பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அக்சய் குமார், காஜல் அகர்வால், மோகன் லால், பிரபாஸ் ஆகியோர் இத்திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். 

blue sattai maran criticize that mani ratnam direct a dubakoor movie

இத்திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் பாஸிட்டிவான விமர்சனங்களையே கூறி வருகின்றனர். படத்தின் முதல் பாதி அருமையாக இருப்பதாகவும் இரண்டாம் பாதியின் திரைக்கதை சற்று தொய்வாக அமைக்கப்பட்டிருக்கிறது என்றாலும் கிளைமேக்ஸிற்கு முந்தைய காட்சிகளில் இருந்து படம் சூடுபிடிப்பதாகவும் படம் பார்த்தவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில் இத்திரைப்படத்தை பிரபல விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் விமர்சித்துள்ளார். அப்போது அவர் மணிரத்னம் குறித்து பேசியது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

டுபாக்கூர் படம்

“கண்ணப்பா படம் நிச்சயமாக ஒரு தரமான படம் என்று சொல்லலாம். ஏனென்றால் படம் பார்ப்பவனை முட்டாள் என நினைக்காமல் ஒரு தரமான படத்தை கொடுத்திருக்கிறார்கள். சமீபத்தில் மணிரத்னம் பொன்னியின் செல்வன் என்று ஒரு வரலாற்றுப் படத்தை எடுத்தார். எவ்வளவு பெரிய டுபாக்கூர் படத்தை எடுத்து நம்முடைய தலையில் கட்டினார் அவர், அது போல் இல்லாமல் படத்திற்கு எந்த மாதிரி நேர்மையாக செலவு செய்ய வேண்டுமோ, எப்படிப்பட்ட தரமான படத்தை அளிக்க வேண்டும் என நினைத்தார்களோ அதை செய்திருக்கிறார்கள்” என கூறியுள்ளார்.

blue sattai maran criticize that mani ratnam direct a dubakoor movie

மேலும் பேசிய அவர், “கண்ணப்பா படத்தின் முதல் பாதி ஓரளவு நன்றாகவே இருந்தது. இரண்டாம் பாதி கொஞ்சம் Lag தான். இருந்தாலும் படம் போர் அடிக்காமல் இருக்கிறது. இந்த படத்தை கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் பார்த்தார்கள் என்றால் நிச்சயமாக இன்றைக்கு இருக்கக்கூடிய தொழில்நுட்பத்தில் ஒரு வித்தியாசமான சாமி படத்தை பார்த்த திருப்தி கிடைக்கும்” என பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!
  • Leave a Reply