லோகேஷை பார்த்து கெட்டுப்போன மலையாள இயக்குனர்கள்? வம்படியாக வம்பிழுக்கும் ப்ளூ சட்டை மாறன்!
Author: Prasad30 August 2025, 12:15 pm
லோகா சேப்டர் ஒன்
துல்கர் சல்மான் தயாரிப்பில் டாமினிக் அருண் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி வெளியான திரைப்படம் “லோகா சேப்டர் ஒன்: சந்திரா”. இத்திரைப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், நஸ்லின் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இதில் சாண்டி மாஸ்டர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் மாய சக்திகள் கொண்ட சூப்பர் ஹீரோவாக நடித்துள்ளார். இத்திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் பிரபல விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் இத்திரைப்படத்தை மிகவும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இவங்களை பார்த்து கெட்டுப்போய்டாங்க!
“ஹாலிவுட்டில் மார்வலும் DC-யும் சூப்பர் ஹீரோக்களை உருவாக்கி வைத்து மொக்கை மொக்கையாக படம் எடுத்து தள்ளுகிறார்களே, அந்த மாதிரி படங்களை நாமும் எடுத்து தள்ளலாம் என முடிவெடுத்து இந்த படத்தை எடுத்திருக்கிறார்களா என தெரியவில்லை. சூப்பர் ஹீரோ படமாக இருந்தாலும் கொஞ்சம் லாஜிக் வேண்டுமல்லவா? ஆனால் எந்த வித லாஜிக்கும் இல்லாமல் கன்றாவியாக இந்த படத்தை எடுத்து வைத்திருக்கிறார்கள்.

தமிழ் சினிமாவில் ஆயுதம் கடத்துறது, போதை பொருள் கடத்துறது அல்லது ஊரில் உள்ள பெரிய நடிகர்களை எல்லாம் நடிக்க வைத்து உப்மா கிண்டி ஒரு படம் எடுப்பார்கள். இதை எல்லாம் பார்க்கக்கூடாது என்றுதான் உண்மைக்கு நெருக்கமாக இருக்கும் மலையாள சினிமாக்களை பார்க்கிறோம். ஆனால் லோகா படத்திலும் நாங்களும் கேமியோ பண்றோம் என்ற பெயரில் சௌபின் சாஹிர், டொவினோ தாமஸ், துல்கர் சல்மான் என கேமியோக்களாக பல நடிகர்களை நடிக்க வைத்து வேஸ்ட் செய்திருக்கிறார்கள். தமிழ் படங்களை பார்த்து அவர்களும் கெட்டுப்போய்விட்டார்கள்” என லோகா படத்தை விமர்சித்திருந்தார்.
“இவர் லோகேஷ் கனகராஜ்ஜைதான் போகிற போக்கில் கேலி செய்கிறார்” என ரசிகர்கள் பலரும் கம்மண்ட் செய்து வருகின்றனர்.
