ஆடியன்ஸ் கண் முன்னாடியே திமிருத்தனமா? சூர்யா சேதுபதியை பங்கமாய் கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்!

Author: Prasad
5 July 2025, 1:19 pm

பபுள்கம் மென்றபடி போஸ் கொடுத்த சூர்யா சேதுபதி

விஜய் சேதுபதியின் மகனான சூர்யா சேதுபதி “பீனிக்ஸ்” திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். இத்திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பே பெற்றுள்ளது. திரைப்படத்தின் கதை, திரைக்கதை என எதிலும் சுவாரஸ்யமே இல்லை எனவும் படத்தில் ஆக்சன் காட்சிகள் மட்டுமே சிறப்பாக உள்ளதாகவும் ரசிகர்கள்  கருத்து தெரிவித்து வருகின்றனர். இத்திரைப்படத்தை ஸ்டன்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் ஆக்சன் காட்சிகள் சிறப்பாக அமைந்ததற்கு அனல் அரசு இயக்குனராக இருப்பது ஒரு முக்கிய காரணம் என கூறப்படுகிறது. 

blue sattai maran troll surya sethupathi acting in phoenix movie

இத்திரைப்படம் வெளியானதற்கு முன்பு இத்திரைப்படத்திற்கான புரொமோஷன் பணிகளில் சூர்யா சேதுபதி தனது வாயில் பபுள்கம் மென்றபடி புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்த வீடியோ இணையத்தில் வைரல் ஆன நிலையில் நெட்டிசன்களால் ட்ரோலுக்குள்ளானது. 

பங்கமாய் கலாய்த்த ப்ளு சட்டை மாறன்!

இந்த நிலையில் பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன், “பீனிக்ஸ்” திரைப்படத்தை தனது வீடியோ ஒன்றில் விமர்சித்துள்ளார். இத்திரைப்படத்தை குறித்து மிகவும் நெகட்டிவாக விமர்சித்துள்ள அவர், “படம் வெளியாவதற்கு முன்பே ஹீரோ சூர்யா சேதுபதி உலக பிரசித்தி பெற்றுவிட்டார். அவர் பேசிய பேச்சு அவர் நடை உடை பாவனைகளை பார்த்துவிட்டு அவருக்கு திமிர் அதிகமாக இருப்பதாக மீம்ஸ் போடுகிறார்கள். அதை பற்றி நமக்கு கவலை இல்லை. அவரவர்கள் செய்யும் நல்லதுக்கும் கெட்டதுக்கும் அவரவர்களே பொறுப்பு. தீதும் நன்றும் பிறர் தர வாரா. 

ஆனால் திரையரங்கில் அவரை நம்பி படம் பார்க்க வந்தார்கள் அல்லவா? அந்த ஆடியன்ஸை மதிக்க வேண்டும் அல்லவா? அங்கேயும் வந்து தனது திமிர்த்தனத்தை காட்டுகிறார். விஜய் சேதுபதி பையன் நடிக்க வந்திருக்கிறாரே? அதை போய் பார்ப்போம் என்று ஆர்வமாக ஆடியன்ஸ் படம் பார்க்க வந்தால். அவர் நடிக்கணுமா வேண்டாமா? 

blue sattai maran troll surya sethupathi acting in phoenix movie

ஆனால் விஜய் சேதுபதி பையன் என்றால் நடிக்கதான் வேண்டுமா? அதெல்லாம் நடிக்க முடியாது, போடா என்பது போல் ஆடியன்ஸை முறைத்து முறைத்து பார்க்கிறார். நடிக்க முடியாதுடா என்பது போல் செய்கிறார். இது திமிர்த்தனமா இல்லையா?” என்று தனது ஸ்டைலில் விமர்சனம் செய்துள்ளார். இவரது விமர்சனம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

  • samantha shared the experience while switched off her mobile in 3 days செல்ஃபோனை 3 நாட்கள் ஸ்விட்ச் ஆஃப் செய்த சமந்தா? அவருக்குள்ள இப்படி ஒரு யோசனையா?
  • Leave a Reply