‘தங்கலான் பார்த்தா தொங்கலான்னு தோணுது’ – பா. ரஞ்சித்தை பங்கமா கலாய்த்த பிரபலம்!

Author:
17 August 2024, 10:34 am

பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரமின் நடிப்பில் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகி திரையரங்கில் சட்டை போடு வரும் திரைப்படம் தான் தங்கலான் இந்த திரைப்படத்தில் விக்ரமுடன் சேர்ந்து பார்வதி மேனன், மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருக்கிறார்கள்.

இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருக்கிறார். படம் வெளியாகி கலமையான விமர்சனத்தை பெற்று வந்தாலும் வசூலுக்கு எந்த குறையும் இல்லை என்கிறது பாக்ஸ் ஆபிஸ் நிலவரம். தற்போது நிலவரப்படி உலகம் முழுவதும் கிட்டத்தட்ட ரூபாய் 35 கோடி வரை வசூல் ஈட்டியுள்ளது.

இப்படியான நேரத்தில் தங்கலான் படத்தை பார்த்து பிரபல சர்ச்சைக்குரிய விமர்சகர் ஆன ப்ளூ சட்டை மாறன் படத்தை பங்கமாக கலாய்த்து விமர்சித்திருக்கிறார். அதை பற்றி தற்போது இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம். பழங்குடியின மக்களின் வலியையும் வேதனையும் தான் பா ரஞ்சித் படமாக சொல்லப் போகிறார் என்று மிகுந்த எதிர்பார்ப்போடு படத்தை போய் பார்க்க உட்கார்ந்தால்…நான் எவ்வளவு பெரிய அறிவாளின்னு பாருங்க என காட்டிவிட்டார்.

கோலார் தங்க வயலின் ரத்த சரித்திரத்தை படமாக எடுக்கச் சொன்னால் சிறு தெய்வ வழிபாடு, பெருமாள், ராமானுஜம், கிறிஸ்தவ மதம்,முஸ்லீம் மதத்திலிருந்து திப்புசுல்தான் ஆகியோரே மொத்த பேரையும் இழுத்துக் கொண்டு தன்னுடைய சாதி மதம் குறித்த அரசியல் நிலைப்பாட்டையே முழுக்க முழுக்க கதையாக சொல்லி தங்கலானுக்கு ஈயம் பூசி உருட்டி எடுத்திருக்கிறார் ரஞ்சித்.

கதையை நல்லா சொதப்பி வச்சியிருக்காரு… விஷுவலில் பரதேசி , ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களின் சாயல் அப்படியே காப்பி அடித்திருக்கிறார். ஒரு படத்தை தியேட்டருக்கு போய் பார்த்தால் ஒருத்தருக்கு படம் புடிக்கணும்… சில பேருக்கு படம் பிடிக்காது. ஆனால் ஒட்டுமொத்த பேருக்கும் படம் புரியவே இல்லை என்றால் அது யாருடைய தவறு? படத்துல வசனமும் புரியல கதையும் புரியலன்னு படத்த பார்த்தவங்க புலம்புறாங்க.

thangalaan - upddatenews360

இது பீரியாடிக் பிலிம் அப்படின்னு சொல்லிட்டு அதுக்கான எந்த ஒரு வேலையும் மெனக்கட்டு செய்யவே இல்ல. குடியிருப்பு பகுதியின்னு காட்டுறாங்க அதுல அப்படியே செயற்கையா செட் போட்டது அப்பட்டமா தெரியுது. காஸ்டியூம் சுத்தமா நல்லாவே இல்ல… ஆரம்பத்துல படம் பார்க்க என்னவோ நல்லா தான் இருந்துச்சு. ஆனால் போக போக படத்தோட கனெக்ட் ஆகவே முடியல.

இதுல பாராட்டுக்கூடிய விஷயம் விக்ரம் , பார்வதி, மாளவிகா இவங்க மூணு பேருமே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்காங்க. எனவே விக்ரமின் உழைப்பை பார ரஞ்சித் வீண் அடிச்சிட்டாரு. சரியில்லாத கதையும் வலுவில்லாத திரைக்கதையும் படத்தை அப்படியே ஜவ்வு மிட்டாய் மாதிரி இழுத்துட்டே போகுது.

இது எல்லாத்தையும் விட படம் முடியும்போது பார்ட் 2ன்னு லீட் கொடுத்து முடிக்கிறாங்க ஒரு நிமிஷம் உடம்பு ஆட்டம் கொடுத்துடுச்சு. உண்மைக்கு நெருக்கமான படங்களை கொடுத்து வந்த பா ரஞ்சித் உண்மையான ரத்த சரித்திரம் குறித்து படம் எடுப்பார்னு பார்த்தல் அதுதான் இல்ல…. மொத்தத்துல தங்கலான் படத்தை பார்த்தா தொங்கலாம்னு தோனிடும் என்று ப்ளூ சட்டை மாறன் பங்கமாக ட்ரோல் செய்து இருக்கிறார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!