காமெடி படம்னு சொன்னாங்க, ஆனா காமெடிய காணும்- தேசிங்கு ராஜா 2 படத்தை பொளந்து கட்டிய ப்ளூ சட்டை மாறன்
Author: Prasad12 July 2025, 4:48 pm
புரட்டி போட்டு அடித்த ரசிகர்கள்!
எஸ் எழில் இயக்கத்தில் விமல், ஜனா, புஜிதா பொன்னாடா, ஹர்ஷிதா பண்டலமுரி, புகழ், ரவி மரியா, சிங்கம்புலி உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம் “தேசிங்கு ராஜா 2”. 2013 ஆம் ஆண்டு விமல் நடித்த மாபெரும் ஹிட் திரைப்படமான “தேசிங்கு ராஜா” திரைப்படத்தின் இரண்டாம் பாகம் என்பதால் இத்திரைப்படத்திற்கு ஓரளவு எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இத்திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நொந்துப்போய் வெளியே வந்தார்கள். தயவு செய்து இத்திரைப்படத்தை பார்த்துவிடாதீர்கள் என கெஞ்சுகிறார்கள். இவ்வாறு மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற இத்திரைப்படத்தை ப்ளூ சட்டை மாறன் கலாய்க்கும் தொனியில் விமர்சித்துள்ளார்.

காமெடி மட்டும் வரவேயில்ல!
“இது ஒரு காமெடி படம் என்று நினைத்து அவர்கள் எடுத்திருப்பதால் படம் முழுக்க சின்ன சின்ன கதாபாத்திரங்களில் கூட காமெடி நடிகர்களை நடிக்க வைத்திருக்கிறார்கள். காமெடியன்கள் மட்டுந்தான் வந்து வந்து போகிறார்களே தவிர, காமெடி வரவேமாட்டிகிறது.

படத்தில் காமெடியும் இல்லை கதையும் இல்லை என்பது ஒரு பக்கம் இருந்தால் கூட, படமாவது படம் மாதிரி இருக்கிறதா? என்று கேட்டீர்கள் என்றால், இப்படம் ஒரு உப்மா படம் மாதிரிதான் இருக்கிறது என்று சொல்லலாம். இந்த வருடத்தில் வெளிவந்த படங்களிலேயே ஒரு குறிப்பிடும்படியான விஷயமும் இல்லாத ஒரு குறிப்பிடும்படியான படம் என்றால் அது இந்த படம்தான்” என தனது தனித்துவமான ஸ்டைலில் “தேசிங்கு ராஜா 2” படத்தை விமர்சனம் செய்துள்ளார் ப்ளு சட்டை மாறன்.
