அந்த ஏழு பேர்… ரஜினியின் கமெண்ட்ஸ்… கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்!

Author: Udayachandran RadhaKrishnan
9 December 2024, 2:27 pm

சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த்திடம் செய்தியாளர்கள், திருவண்ணாமலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்த ஏழு பேர் பற்றி கேள்வி கேட்டனர்.

அதற்கு அவர், “எப்போ? ஓ மை காட்… சாரி” என்று பதில் அளித்து சென்றார். இந்தக் காணொளியைப் பார்த்த ரசிகர்கள், “ரஜினிக்கு இந்த விஷயமும் தெரியாது! ஒரு ஆறுதலையும் சொல்லமாட்டார்!” என்று விமர்சித்து வருகின்றனர்.

இதையும் படியுங்க: நெஞ்சை இழு இழு இழுவென இழுக்குதடி… மனசை கெடுக்க வந்த Violet Sparrow பிரியங்கா மோகன்!

பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் தளத்தில் இந்த சம்பவத்தை விவரித்துக் கூறியுள்ளார்.

“ராஜீவ் காந்தி கொலை விவகாரத்தில் கைதானவர்கள் பற்றி கேட்டபோது ‘யார் அந்த ஏழு பேர்?’ என்று கேட்டவர், இப்போது திருவண்ணாமலையில் நடந்த சம்பவம் பற்றி கேட்டபோது ‘எப்போது நடந்தது?’ என்று கேட்கிறார். Oh My God!” என்று ப்ளூ சட்டை மாறன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இன்னொரு ட்வீட்டில், “தலைவரின் அதிரடி பஞ்ச்கள்… நோ கமெண்ட்ஸ், தெரியாது, எப்போ?, ஓ மை காட்!” என்று பதிவிட்டுள்ளார். இந்த ட்வீட்டுகள் தற்போது ட்ரெண்டாகி வருகின்றன.

  • a fan comment on vijay tweet about operation sindoor make fans angry ஆப்ரேஷன் சிந்தூர்- விஜய்யின் டிவிட்டர் பதிவால் கொதித்தெழுந்த ரசிகர்கள்! என்னவா இருக்கும்?