துணிவு ஹீரோவுக்கு வந்த சோதனை?.. லெஜெண்ட் அண்ணாச்சியுடன் ஒப்பிட்டு அஜித்தை கலாய்த்த ப்ளு சட்டை மாறன்..!

Author: Vignesh
19 December 2022, 3:00 pm

ப்ளூ சட்டை மாறன் யூடிப்பில் படங்களை ரிவியூ செய்யும் விமர்சகர்களுள் பிரபலமானவர். சீசனுக்கு தகுந்த மாதிரி விஜய் மற்றும் அஜித் ரசிகர்களை சீண்டி வாங்கி கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

என்னதான் ரசிகர்கள் ப்ளு சட்டை மாறனை கழுவி ஊற்றினாலும் எதைப்பற்றி கவலைப்படமால் சகட்டுமேனிக்கு எல்லா ஸ்டார் நடிகர்களையும் வச்சு செய்ப்பவர்.

நல்ல படங்களுக்கும் ப்ளு சட்டை மாறன் நெகட்டிவ் விமர்சனம் தருவதாகவும், தனது ரிவியூவில் உருவக்கேலி செய்வதாகவும் எதிர்ப்புகள் எழுவது வழக்கமாக இருந்து வருகிறது.

ajith and vijay updatenews360(1)

ஆனாலும் ப்ளு சட்டை மாறனின் விமர்சனத்திற்கு என்றே தனியொரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது என்றால் அது நம்பமுடியாத ஒன்றாக உள்ளது. மேலும் தற்போது சோஷியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருக்கும் ப்ளு சட்டை மாறன், ட்விட்டரில் பகிரும் பதிவுகள் மூலம் விஜய் மற்றும் அஜித் ரசிகர்களை சீண்டி வருகிறார்.

blue sattai maran - updatenews360-1

அந்த வகையில் தற்போது ப்ளு சட்டை மாறன் பகிர்ந்துள்ள பதிவு ஒன்று அஜித் ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இந்த 2022 வருடம் முடிய உள்ளதால் இந்த வருடத்தில் யூடிப்பில் அதிக பார்வையாளர்களை பெற்ற படங்களின் லிஸ்ட் குறித்து பதிவு ஒன்றை ப்ளு சட்டை மாறன் பகிர்ந்துள்ளார்.

அதில், தி லெஜண்ட் படத்தின் டிரெய்லர் வலிமை படத்தினை விட அதிக பார்வையாளர்கள் பார்த்துள்ளதாக பதிவிட்டுள்ளார்.

valimai -updatenews360-1

அந்த பதிவில், லெஜண்ட் சரவணா அண்ணாச்சி புகைப்படத்தை பகிர்ந்து ட்ரெய்லர் வியூஸ் 2022: தி லெஜண்ட் 32 மில்லியன், வலிமை 25 மில்லியன். அண்ணாச்சியின் பவரை குறைத்து மதிப்பிட வேண்டாம் என பதிவிட்டுள்ளார்.

ப்ளு சட்டை மாறனின் இந்த பதிவு அஜித் ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து அவரை அஜித் ரசிகர்கள் விளாசி வருகின்றனர்.

varishu-updatenews360

முன்னதாக ‘வாரிசு’ பட தயாரிப்பாளர் தில் ராஜு, தமிழ்நாட்டில் விஜய் தான் நம்பர் ஒன். வாரிசு படத்திற்கு துணிவு படத்தை விட அதிக திரையரங்குகள் ஒதுக்க வேண்டும் என்று பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். இதனால் தமிழ்நாட்டில் யார் நம்பர் ஒன் ஸ்டார் என்று சோஷியல் மீடியாவில் பெரிய பஞ்சாயத்தே நடந்து வரும் நிலையில், ப்ளூ சட்டை மாறனின் இந்த பதிவு மீண்டும் அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் புகைச்சலை ஏற்படுத்தி இருக்கிறது.

Legend Saravanan updatenews360

இதனிடையே, பொங்கலன்று வெளியாக உள்ள விஜய்யின் ‘வாரிசு’ மற்றும் அஜித்தின் ‘துணிவு’ படங்களுக்கு தமிழ்நாட்டில் சம அளவில் திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Fans Mock DD New Photos வயசானதால் ஞாபக மறதியா? DD போட்ட Photo.. கலாய்த்த நெட்டிசன்கள்!!
  • Views: - 465

    0

    0