விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த வரல புத்தாண்டு ஒரு கேடு… அஜித்தை மோசமாக விமர்சித்த Blue சட்டை மாறன்!

Author: Rajesh
5 January 2024, 12:08 pm

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான அஜித் படங்களில் நடிப்பதோடு சரி எந்த பொது நிகழ்ச்சிக்கோ, திரைப்படம் சார்ந்த விழாக்களிலோ பங்கேற்கவே மாட்டார். இதனை அவர் தனது கொள்கையாகவே பல வருடங்களாக செய்து வருகிறார். இதனை சிலர் பாராட்டினாலும் பெருவாரியான ஜனங்கள் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் அண்மையில் மறைந்த நடிகர் விஜயகாந்த் உடலுக்கு பல்வேறு திரைத்துரைப்பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள். ஆனால் நடிகர் அஜித் வரவே இல்லை. அதற்கான கரணம் அவர் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்கில் இருப்பதாக கூறப்பட்டது. ஆனால்,ம் உண்மையில் அவர் ஷூட்டிங்கில் இல்லை.

புத்தாண்டு கொண்டாட்டத்திற்காகவும் மகளின் பிறந்தநாளை கொண்டாடவும் துபாய்க்கு குடும்பத்தினரோடு சென்றுள்ளார் . அதன் வீடியோ மற்றும் புகைப்படங்கள் கூட இணையத்தில் வெளியாகி வைரலாகியது. இதை பார்த்து கடுப்பில் உச்சத்திற்கே சென்ற பிரபல திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் ‘விஜயகாந்திற்கு இறுதி அஞ்சலி செலுத்த முடியவில்லை.

வெளிநாட்டில் ஷூட்டிங்’ என காதுகுத்திய பல முன்னணி நடிகர் மற்றும் நடிகைகள்.. ஆங்கில புத்தாண்டை வெவ்வேறு நாடுகளில் கொண்டாடிவிட்டு சென்னை வருகை. ஓரிரு நாட்கள் ரெஸ்ட் எடுத்துவிட்டு… ஆறாம் தேதி நடைபெறும் ‘கலைஞர் 100’ கலைநிகழ்ச்சியில் பங்கேற்க திட்டம். அவர் அஜித்தை தான் மறைமுகமாக திட்டுகிறார் என்று பலர் கூறி வருகின்றனர். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!