மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் இசை;ஏ ஆர் ரகுமான் சொன்ன இயற்கை விதி!..

Author: Sudha
6 July 2024, 2:27 pm

பாலிவுட் திரையுலகின் தயாரிப்பாளர்,பாடலாசிரியர் ஜாவத் அக்தர் இவர் ஏ ஆர் ரகுமான் குறித்து வியப்பூட்டும் சில தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

ஏ ஆர் ரகுமான் ஒரு படத்திற்கு இசையமைக்கும் போது ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்து அந்த மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் இசையமைப்பார். அதன் காரணம் அறிய ஆவலாக இருந்தேன்.

ஒரு நாள் அவரிடம் பேசிக் கொண்டிருக்கும் போது அது குறித்து அவரிடம் கேட்டேன்.
அதற்கு அவர், ‘இந்த ஸ்டூடியோவில் இருக்கும் எல்லா இசைக் கருவிகளும், மற்றவையும் இயந்திரங்கள். இந்த அறை இயந்திரங்களால் மட்டுமே நிரம்பி இருப்பது ஒருவிதமான செயற்கைத் தன்மையை மனதில் ஏற்படுத்துகிறது. அதனால், இயற்கையை கொஞ்சமேனும் உணரவும் அனுபவிக்கவும் நான் இப்படி மெழுகுவர்த்திகளை ஏற்றி அதன் வெளிச்சத்தில் இசையமைப்பேன்” என்றார்.

இந்த தகவல் எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மற்றொன்று யார் கருத்து சொன்னாலும் அதை காது கொடுத்து கேட்பவர் ஏ ஆர் ரகுமான். இதைப் பற்றி ஏ ஆர் ரகுமான் சொல்லும் போது நான் மட்டும் ஒரு வேலையைச் செய்தால் அது ஒரே மாதிரியான படைப்பாகவே இருக்கும். பிறரின் ஐடியாக்களையும் கேட்டு இசையமைத்தால் புதுப்புது படைப்புகள் உருவாகும்’ என்றார்.

இந்த இரண்டு நிகழ்வுகளும் என்னை மிகவும் பாதித்தது. அவரிடமிருந்து நிறையக் கற்றுக் கொண்டிருக்கிறேன். என்று ரஹ்மான் குறித்து நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார் ஜாவத் அக்தர்.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?