கடைசி வரை சிங்கிள்தான்; கமிட் ஆக வாய்ப்பே இல்லை; உலக அழகியின் முடிவு

Author: Sudha
21 July 2024, 3:42 pm

1997-ஆம் ஆண்டு நாகர்ஜூனாவிற்கு ஜோடியாக ‘ரட்சகன்’ படம் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார் சுஷ்மிதா சென்.பாலிவுட்டில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர். தற்போது சுஷ்மிதா சென்னுக்கு 46 வயதாகிறது.இன்னும் சிங்கிள் ஆக இருக்கிறார்.

இரண்டு பெண் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.தனது இரண்டு பெண் குழந்தைகளை வளர்ப்பதில் தனது முழுநேரத்தையும் செலவிட்டு வருகிறார் சுஷ்மிதா சென்.சில வருடங்கள் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தார்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘Taali’ படத்தில் நடித்திருந்தார். இப்படம் மும்பையைச் சேர்ந்த சமுக ஆர்வலர் மற்றும் திருநங்கைகளின் உரிமைக்காகக் குரல் கொடுத்து வரும் கௌரி சாவந்த் என்ற திருநங்கையின் வாழ்கை வரலாற்றுப் படமான இது கடந்த 2023-ல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

சுஷ்மிதா சென், சுமார் ஐந்து ஆண்டுகள் ரோஹ்மன் என்பவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து, பிறகு கடந்த 2021ம் ஆண்டு இவருவரும் தங்கள் பிரிவை அறிவித்தனர். அவரைப் பற்றி பரவும் ரிலேஷன்ஷிப் புரளிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

அதில், “நான் மகிழ்ச்சியானதொரு இடத்தில் இருக்கிறேன். நான் யாரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை” என்று தனது எக்ஸ் வலைதளத்தில் தெளிவுபடுத்தியிருந்தார்.

சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசியிருக்கும் சுஷ்மிதா சென், “எனது ஐந்து ஆண்டுகாள காதல் வாழ்வை அன்புடன் முடித்துக்கொண்டேன். இருவரும் பரஸ்பர அன்புடன் பிரிந்துவிட்டோம். அந்த ஐந்து ஆண்டுகால காதல் வாழ்வை எனக்கு நீண்ட காலம்தான். இப்போது நான் யாருடனும் ரிலேஷன்ஷிப்பில் இல்லை. நிம்மதியாக சிங்கிளாக நான் என் வாழ்வை வாழ்கிறேன். எனக்கு யாருடைய துணையும் தேவையில்லை.இதுபோது எனக்கு வாழ்நாள் முழுவதும் என் குழந்தைகளுடன் சிங்கிளாகவே என் வாழ்வை மகிழ்ச்சியாக வாழ்ந்துவிடுவேன்” என்று மனம் திறந்து பேசியிருக்கிறார்.

  • Seenu Ramasamy divorce reasons இளம் நடிகைகளுக்கு குறி…இயக்குனர் “சீனு ராமசாமி” விவாகரத்தின் பின்னணி… பகிரங்கமாக பேசிய பயில்வான்..!
  • Views: - 142

    0

    0