பிரியா பவானி சங்கர் கொடுத்த லிப் டூ லிப் கிஸ்.. யாருக்கு தெரியுமா.?

Author: Rajesh
1 June 2022, 6:52 pm
Quick Share

சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக இருந்து சினிமாவிற்குள் வந்தவர் பிரியா பவானி ஷங்கர். நியூஸ் Anchor ஆக தனது Career-ஐ தொடங்கிய பிரியா, விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை தொடரின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

அதன்பின் மேயாதமான் படத்தின் மூலம் சினிமாவில் வந்த இவர் பெரிதும் கவனிக்கப்பட்டார். அடுத்த படமே பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தியுடன் நடிக்க கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடிக்க, எல்லோர் மத்தியிலும் பிரபலம் ஆனார். அதன்பின் கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாஃபியா படத்தில் நடித்தார், ஆனால் அது சரியாக ஓடவில்லை. அதன் பிறகு களத்துல சந்திப்போம் படம் சுமாராக ஓடியது.

இப்போது ஹாட்ஸ்டார் இல் ரிலீஸான ‘ஓ மன பெண்ணே’ மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் சில நாட்களுக்கு முன் Release ஆன Blood Money என்கிற படமும் ஓரளவுக்கு வரவேற்பு இருக்கிறது.

தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வரும் பிரியா பவானி ஷங்கர், இவ்வளவு பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும் சோசியல் மீடியாவில் தனது ரசிகர்களுக்கு தரிசனம் கொடுக்க இவர் தவறுவதே இல்லை. அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். எஸ்.ஜே சூர்யா நடிக்கும் ‘பொம்மை’ படத்தில் பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.

இந்நிலையில் ‘பொம்மை’ படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. இதனை சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஒரு பொம்மையுடன் உளவியல் ரீதியாகக் காதல் கொள்ளும் கதாநாயகன், அதற்காக கொலையும் செய்கிறான். இதனால் ஏற்படும் சிக்கலான சூழல்களை அவன் எவ்வாறு எதிர்கொள்கிறான் என்பதை விவரிப்பது போல் இந்த ட்ரைலர் வெளியாகியுள்ளது. ரொமாண்டிக் த்ரில்லர் ஜானரில் வெளியாகியுள்ள இந்த ட்ரைலர் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

.

Views: - 1149

3

2