‘வலிமை’ தயாரிப்பாளர் போனி கபூரின் வீட்டில் மேலும் இரண்டு பேருக்கு COVID 19

22 May 2020, 9:53 pm
Quick Share

மூத்த பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் செவ்வாய்க்கிழமை 23 வயதான தனது வீட்டு உதவியாளர் சரண் சாஹுவுக்கு கோவிட் 19 சோதனை செய்ததாகவும்,பின் நோய் உறுதியானதும் தனிமைப்படுத்தப்பட்ட இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார். தனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிற ஊழியர்கள் பாதுகாப்பாக இருப்பதையும் அவர் தெளிவுபடுத்தியிருந்தார்.

மும்பையில் உள்ள போனி கபூரின் லோகண்ட்வாலா இல்லத்தில் மேலும் இரண்டு ஊழியர்கள் நோய் தொற்று அறிகுறி தென்பட்டு., சோதனை செய்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்பது இப்போது தெரிய வந்துள்ளது. போனி கபூர் தனது மகள்கள் ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூருடன் இந்த வீட்டில் வசித்து வருகிறார், மேலும் அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக தெரிகிறது.

மீண்டும் தல அஜித் மற்றும் இயக்குனர் எச். வினோத் ஆகியோருடன் இணையும் இவர் ‘நேர்கொண்ட பார்வை ‘ படத்திற்குப் பிறகு ‘வலிமை ‘ படத்தையும் தயாரிக்கிறார். இயல்புநிலை திரும்பியவுடன் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.