#BoycottSaiPallavi.. சாய் பல்லவிக்கு எதிராக ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக் : நடந்தது என்ன?

Author: Udayachandran RadhaKrishnan
28 அக்டோபர் 2024, 5:37 மணி
sai
Quick Share

#BoycottSaiPallavi என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி சாய் பல்லவிக்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

இயக்குநர் நித்தேஷ் திவாரி ராமாயணம் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். பிரம்மாண்டமான தங்கல் படத்தை இயக்கியவரும் இவரே,

தற்போது ராமாயணா படத்தில் கடவுள் ராமராக ரன்பீர் கபூர் நடிக்கிறார். சீதாவாக சாய் பல்லவியும், ராவணனாக யஷ் நடித்து வருகின்றனர்.

பல மொழிகளில் தயாரிக்கப்படும் இந்த திரைப்படத்தில் நடிகர்கள் யார் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் முன்னே ரன்பீர் மற்றும் சாய் பல்லவியுன் புகைப்படங்கள் வைரலாகின.

இதையடுத்து #BoycottSaiPallavi என்ற ஹேஷ்டேக் X தளத்தில் டிரெண்டாகி வருகிறது. அதற்கு காரணம் சில ஆண்டுகளுக்கு முன் சாய்பல்லவி கொடுத்த நேர்காணலும், அதற்கான கருத்துகளும் தான்.

கடந்த 20200ஆம் ஆண்டு விரடா பர்வ என்ற திரைப்படத்தில் ராணா டகுபதியுடன் சாய் பல்லவி நடித்திருந்தார். 1990களில் தெலங்கானாவில் நடந்த நக்சலைட்டுகளின் பின்னணி தழுவி எடுக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாக அப்போது சாய்பல்லவி நேர்காணலில் சில கருத்துக்களை முன்வைத்தார். அந்த வீடியோவில் துப்பாக்கியை பிடித்து நடித்தது எப்படி இருந்தது, பெண்கள் துப்பாக்கி பிடித்து ஒரு வாழ்க்கையை வாழ்கிறார்கள், அவர்கள் மீது ஏதாவது அனுதாபம் ஏற்பட்டதா என தொகுப்பாளர் கேட்க, அதற்கு பதிலளித்த சாய் பல்லவி, அது ஒரு கருத்தியல். உங்களுக்கு ஒரு சித்தாந்தம் இருக்கும், எனக்கு ஒரு சித்தாந்தம் இருக்கும். சட்டம் இருக்கும் போது எது சரி எது தவறு என்று பார்க்கவேண்டும், ஆனால் அந்த காலக்கட்டத்தில் எங்கு செல்ல வேண்டும் என்பது தெரியவில்லை என பேசினார்.

தொடர்ந்து பேசிய சாய் பல்லவி, காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் குறித்து பேசினார். அதில் கடந்த காலங்களில் காஷ்மீர் பண்டிட்கள் என்ன துன்பங்களுக்கு ஆளானார்கள் என்பதையும் காட்டினர். மதம் சார்ந்த பிரச்சனை என்றால் கொரோன காலக்கட்டத்திலும் வாகனத்தில் பசுவை ஏற்றி சென்றனர், வாகனத்தை இயக்கியவர் இஸ்லாமியராக இருந்தார். அவரை அடித்து ஜெய்ஸ்ரீராம் சொல்ல வைத்தனர். அப்போது நடந்தற்கும் இப்போது நடந்ததற்கும் என்ன வித்தியாசம்? நாம் மனிதர்களாக இருக்க வேண்டும், அப்படி இருந்தால் பிறரை துன்புறுத்த மாட்டோம். நல்ல மனிதராக இருந்தால் வலதுசாரி, இடதுசாரி என எந்த பக்கமாக இருந்தாலும் சமமாகத்தான் இருப்பீர்கள் என கூறினார்.

இதற்காகத்தான் தற்போது சாய் பல்லவி சீதா வேடத்தில் நடிக்கக் கூடாது என்ற எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்தியாவின் ராணுவத்தை சாய்பல்லவி இழிவுபடுத்துவதாகவும், இந்திய ராணுவத்தை அவர் இப்படி கூறியது தவறு என்றும் கருத்துகளை முன் வைத்து வருகின்றனர்.

  • Su venkatesan மருத்துவம் பார்ப்பீர்களா அல்லது பாராயணம் பாட சொல்வீர்களா? திமுகவை அலறவிட்ட கம்யூ., எம்பி!
  • Views: - 158

    0

    0

    மறுமொழி இடவும்