பிக் பாஸ் வின்னரை இரண்டாவது திருமணம் செய்கிறாரா மேக்னா ராஜ் ?

Author: Rajesh
22 September 2021, 12:10 pm
Quick Share

கன்னட திரையுலகின் அதிரடி ஹீரோக்களில் ஒருவரான சிரஞ்சீவி சர்ஜா தீடீர் மாரடைப்பால் கடந்த காலமானார். நடிகருக்கு வயது 39. அந்த சமயத்தில் அவரது ரசிகர்கள் மற்றும் ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

சிரஞ்சீவி சர்ஜா பிரபலமான திரைப்பட பிரமுகர்களின் குடும்பத்தில் பிறந்தார். மூத்த நடிகர் சக்தி பிரசாத்தின் பேரனும், தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகரான அர்ஜுன் சர்ஜாவின் மருமகனும் ஆவார். சிரஞ்சீவி அவரது மனைவி மேகனா ராஜை சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

சிரஞ்சீவி சார்ஜா மறைவிற்குப் பிறகு, சில தினங்களில் மேக்னாவுக்கு ஆரோக்கியமான ஆண் குழந்தை பிறந்தது. தற்போது கூட அந்த குழந்தைக்கு பெயர் வைக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வந்தது.

இந்நிலையில் மேக்னா இரண்டாவது திருமணம் செய்ய முடிவு செய்துள்ளதாகவும், பிக்பாஸ் சீசன் 4 கன்னட டைட்டில் வின்னர் பிரதமை தனது வருங்கால கணவராக தேர்ந்தெடுத்ததாகவும் செய்திகள் பரவி வந்தது. ஆனால், பிக்பாஸ் போட்டியாளர் பிரதம் இதற்கு அதிரடியாக மறுப்பு தெரிவித்து இருக்கிறார்.

Views: - 483

2

5