புஸ்ஸி ஆனந்தை சினிமாவிற்குள் இழுத்துக்கொண்டு வந்த விஜய்? இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே…

Author: Prasad
23 August 2025, 5:29 pm

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய பின் முழுநேர அரசியல்வாதியாக பிசியாக வலம் வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற மதுரை மாநாட்டில் கூட திமுக, பாஜக ஆகிய கட்சிகளை மிகவும் கடுமையாக விமர்சித்திருந்தார். 

சமீப காலமாகவே விஜய்யுடன் மிகவும் நெருக்கமாக பயணித்து வருபவர் புஸ்ஸி ஆனந்த். இவர் புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ், அனைத்திந்திய என் ஆர் காங்கிரஸ் போன்ற கட்சிகளில் செயலாற்றியவர். 2006 ஆம் ஆண்டு புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் புஸ்ஸி என்ற தொகுதியில் புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்று புதுச்சேரி சட்டமன்றத்திற்குள் நுழைந்தவர். இவ்வாறு தேர்ந்த அரசியல் அனுபவம் கொண்டவர்தான் புஸ்ஸி ஆனந்த். 

Bussy anand acted in jana nayagan movie

இவர் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளராக உள்ளார். இந்த நிலையில் விஜய்யின் கடைசி திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தில் புஸ்ஸி ஆனந்த் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம். அதாவது ஒரு போராளி கதாபாத்திரத்தில் புஸ்ஸி ஆனந்த் வருகிறாராம். இவ்வாறு ஒரு தகவல் வெளியாகியுள்ளது. 

ஹெச் வினோத் இயக்கியுள்ள “ஜனநாயகன்” திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் மமிதா பைஜு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது. 

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!