நடனத்தில் மிரட்டிய தனுஷ்… பட்டய கிளப்பும் கேப்டன் மில்லர் படத்தின் ‘கோரனாரு’ பாடல்!

Author: Rajesh
2 January 2024, 7:18 pm

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான தனுஷ் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் ’கேப்டன் மில்லர்’ என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். இப்படத்தில் தனுஷ் உடன் பிரியங்கா மோகன், சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்துள்ளது. ஹாலிவுட் படம் ரேஞ்சுக்கு பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் , பாடல்கள் என அடுத்தடுத்து வெளியாகியது. ஜனவரி 12-ஆம் தேதி ரிலீசாக உள்ள இப்படத்தின் ‘கோரனாரு’ என்கிற பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

ஏற்கனவே இப்படத்தில் இருந்து இரண்டு லிரிக்கல் பாடல்கள் வெளியாகியுள்ள நிலையில் தற்போது இந்த புதிய பாடல் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த பாடலில் தனுஷ் மற்றும் கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமாருடன் சேர்ந்து நடனமாடி பட்டையை கிளப்பியுள்ளனர். அடுத்தடுத்து வெளிவரும் அப்டேட்டுகளால் தனுஷ் ரசிகர்கள் கேப்டன் மில்லர் படத்தை அதிக அளவில் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!