கடைசில ‘கேப்டன் மில்லர்’ திருட்டு கதையா? கூச்சமே இல்லாம திருடிருக்காங்க..குட்டு வைத்த பிரபலம்..!

Author: Vignesh
22 January 2024, 12:42 pm

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான தனுஷ் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ’கேப்டன் மில்லர்’ நடித்துள்ளார். இப்படம் இந்த பொங்கல் தினத்தை முன்னிட்டு ரிலீஸ் ஆகியது. இதில் தனுஷ் உடன் பிரியங்கா மோகன், சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.

ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்திருந்தது. ஹாலிவுட் படம் ரேஞ்சுக்கு பிரம்மாண்டமாக உருவாகிய இப்படம் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கிடையில் வெளிவந்து வசூலில் பட்டைய கிளப்பி வருகிறது.

இப்படம் வெளியாகி 10 நாட்களில் உலக அளவில் ரூபாய் 70 கோடி வசூல் செய்து ஆபார சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், வரும் நாட்களில் வசூல் வேட்டை இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.

vela ramamoorthy

இந்நிலையில், பிரபல நடிகர் வேல ராமமூர்த்தி கேப்டன் மில்லர் படம் குறித்து பேசி உள்ளார். அதில் அவர் கூறுகையில், கேப்டன் மில்லர் திரைப்படம் என்னுடைய பட்டத்து யானை நாவலை பின்னணியாக கொண்டு தான் உருவாகி இருப்பதாக கேள்விப்பட்டேன். நான் எழுதிய கதையில் ஹீரோ ஆரம்பத்தில் பிரிட்டிஷ் ராணுவத்தில் இருப்பார். அதன் பின் நாட்டு சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொள்வார். இதில், சில மாற்றங்கள் செய்து கேப்டன் மில்லர் என்கிற பெயரில் படத்தை எடுத்துள்ளனர். என்னிடம் அனுமதி வாங்காமல் படத்தை எடுத்திருப்பது கொஞ்சம் கூட அசிங்கமா இல்லையா கூச்சமா இல்லையா என்று வேல ராமமூர்த்தி கடுமையாக பேசியுள்ளார்.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?