மீண்டும் விஜயகாந்த்…. உருவாகும் மாஸ் படத்தின் பார்ட் 2 : ஹீரோ யார் தெரியுமா?

Author: Udayachandran RadhaKrishnan
1 November 2024, 2:21 pm

நடிகர் விஜயகாந்த் பெயரை சொன்னாலே தமிழகமே உருகும். அந்தளவுக்கு அவர் செய்த நல்ல காரியங்கள் இன்னும் வாழ வைக்கிறது.

விஜயகாந்த் சினிமாவில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் ஏழைகளுக்காக வாழ்ந்தவர். கருப்பு எம்ஜிஆர் என போற்றப்பட்ட விஜயகாந்த், அரசியலில் நுழைந்து உடனே எதிர்க்கட்சி தலைவரானார்.

அதிக மவுசு கொண்ட விஜயகாந்த் தேமுதிகவை தொடங்கி அரசியல்வாதியாக மாறிய ஒரு சில வருடங்களிலேயே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

அவர் மறைந்தாலும், இன்று பல படங்களில் அவரின் பெயரை வைத்து லாபம் பார்த்து வருகின்றனர். சமீபத்தில் வந்த கோட், லப்பர் பந்து இதில் அடங்கும்.

விஜயகாந்த் மகனான சண்முக பாண்டியன் படத்தில் நடித்து வரும் நிலையில், அவரை வம்புக்கு இழுத்துள்ளார் நடிகர் மன்சூர் அலிகான்.

கடந்த 1991ல் செல்வமணி இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த 100வது படம் கேப்டன் பிரபாகரன். அதிரி புதிரி ஹிட்டான இந்த படம் இன்றளவும் மக்கள் மனதில் நீங்காமல் உள்ளது.

இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர். முன்னணி நடிகர்கள் அதற்காக முயற்சி எடுத்து வருகின்றனர்.

இந்த படத்தில் வில்லனாக நடித்த நடிகர் மன்சூர் அலிகான் இன்ஸ்டாகிராம் பதிவு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

குதிரையில் செல்லும் வீடியோவை பகிர்ந்து, கேப்டன் பிரபாகரன் 2 படத்துக்கு ரெடி, ஆனா இயக்குநர் ஆர்கே செல்வமணி தான் என பதிவிட்டுள்ளது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சண்முக பாண்டியனை நடிக்க வைக்க மன்சூர் அலிகான் சிபாரிசு செய்கிறாரோ என்ற கேள்வியும் எழுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!