தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவு.. பிரபலங்கள் போட்ட சோக பதிவு..!

Author: Vignesh
28 December 2023, 10:49 am

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில வருடங்களாகவே உடல்நலம் குன்றி வீட்டிலேயே முடங்கினார். நேற்று உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தேமுதிக தலைமை தெரிவித்தது. மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் வெண்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு சிகிச்சை கொடுக்கப்படுவதாக தெரிவித்தது.

vijayakanth

இதனிடையே, விஜயகாந்தின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், 9 மணிக்கு மருத்துவ அறிக்கை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மியாட் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- கேப்டன்‌ விஜயகாந்த்‌ அவர்கள்‌ நுரையீரல்‌ அழற்சி காரணமாக மருத்துவமனையில்‌ அனுமதிக்கப்பட்டு வென்டிலேட்டர்‌ ஆதரவுடன்‌ சிகிச்சை பெற்றிருந்தார்‌. மருத்துவ பணியாளர்களின்‌ கடின முயற்சி இருந்தபோதிலும்‌ அவர்‌ இன்று காலை 28 டிசம்பர்‌ 2023 காலமானார்‌.” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஆம்புலன்ஸ் மூலம் விஜயகாந்த்தின் உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

Vijayakanth-1

இந்நிலையில், செய்தி கேட்ட மக்கள் அனைவருமே தங்களது வருத்தத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள், பிரபலங்களும் சோகமான பதிவு செய்து வருகிறார்கள்.
இதோ பிரபலங்கள் போட்ட டுவிட் பதிவுகள்…

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!