Exclusive : ஐந்து மொழிகளில் ஐந்து நட்சத்திரங்கள் வெளியிட இருக்கும் மாநாடு படத்தின் டீசர் – வெயிட்டிங்கில் வெறியாகும் ரசிகர்கள்

Author: Udayaraman
2 February 2021, 8:03 pm
Quick Share

அன்பானவன் அசராதவன் அடங்காதவன், வந்தா ராஜாவா தான் வருவேன் போன்ற மொக்கை படங்களை கொடுத்தது மட்டுமில்லாமல், உடல் எடை கூடி இருந்த சிம்பு, ஞானோதயம் பிறந்தது போல உடல் எடையை குறைத்துக் கொண்டு ஈஸ்வரன் படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார்.

படப்பிடிப்புக்கு லேட்டாக வருவது, கொடுத்த நேரத்தில் படத்தை நடித்து முடிக்காமல் இருப்பது போன்ற அவ பெயர்களை வாங்கிய சிம்பு, ஈஸ்வரன் படத்தை குறுகிய நாட்களில் நடித்து முடித்துக் கொடுத்தார். அதுபோக வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு மற்றும் பத்துதல படங்களில் கமிட்டாகி சிம்பு நடித்து வருகிறார்.

தற்போது மாநாடு படத்தின் படப்பிடிப்புகள் ஓரளவு முடிந்திருக்கும் நிலையில் அதன் டீசரை நாளை வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் டீசரை வெளியிட உள்ளனர். ஒவ்வொரு மொழியிலும் அந்த திரையுலகின் முன்னணி நட்சத்திரத்தை வைத்து மாநாடு படத்தின் டீசரை வெளியிட இருக்கிறார்கள்.

மலையாளத்தில் பிருத்விராஜ், தெலுங்கில் ரவிதேஜா, கன்னடத்தில் கிச்சா சுதீப், ஹிந்தியில் அனுராக் காஷ்யப் ஆகியோர் டீசரை வெளியிட போகிறார்கள். சிம்புவின் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் போன்றவை நல்ல நேரம் பார்த்து வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் மாநாடு படத்தின் டீசர் நாளை மதியம் 2.34 மணிக்கு வெளியிடப்படும் என படக்குழு அறிவித்திருக்கிறது. மேலும் இந்த செய்தியின் மூலமாக சிம்பு ரசிகர்கள் மட்டுமில்லாமல் யுவன் சங்கர் ராஜா ரசிகர்களும் வெறித்தனமான வெயிட்டிங்கில் இருக்கிறார்கள்

Views: - 52

0

0