விஜய் பள்ளி தானே நடத்துறாரு.. சாராயக் கடை இல்லையே? ஆதரவு கொடுத்த பிரபலம்!

Author: Udayachandran RadhaKrishnan
20 February 2025, 1:35 pm

தமிழகத்தில் மும்மொழிக் கொள்கைக்கு ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மத்தியில் ஆளும் பாஜக பள்ளிகளில் மும்மொழிக் கொள்கையை திணிப்பதாக தமிழக அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

விஜய் பள்ளி தான் நடத்துறார்.. சாராயக் கடை அல்ல

இதனிடையே நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் திமுகவினர், சீமான், விஜய், திருமாவளவன் போன்றோர் சிபிஎஸ்இ பள்ளிகளை நடத்தி வருவதாக கூறினார்.

நடிகர் விஜய், விஜய் வித்யாஸ்ரம் என்ற பள்ளியை நடத்தி வருகிறார். அதில் இந்தி உள்ளது என கூறியிருந்தார். இது தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில், வலைப்பேச்சு அந்தணன், விஜய்க்கு ஆதரவாக சில கருத்துக்களை கூறியுள்ளார். அதில் விஜய், பள்ளியை தான் நடத்துகிறார். சாராயக் கடையை அல்ல என கூறியுள்ளார்.

Celebrity Supports to Vijay

மேலும் அந்த வீடியோவில், அண்ணாமலை பேச்சை கேட்டால் குபீரென்று சிரிப்புதான் வருது. விஜய் பள்ளியை நடத்துவது அவருக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால் பலருக்கு அது தெரிந்த விஷயம்தான்.

விஜய் மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தார். அந்த பள்ளியில் மும்மொழிக் கொள்கை இருந்தால் என்ன தவறு? விருப்பமுள்ளவர்கள் தான் படிக்க சொல்கிறார்களே தவிர, நிச்சயம் படித்தே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்தவில்லை என அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!