ஜஸ்ட் மிஸ்.. உயிர் போயிருக்கும்.. கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டிக்கு ஏற்பட்ட சோகம்..!

Author: Vignesh
15 April 2024, 12:40 pm

சமீப காலமாக சினிமா நடிகைகளுக்கு இணையாக சின்னத்திரை நட்சத்திரங்களும் தொகுப்பாளினிகளும் அதிக அளவு மக்களிடையே பேமஸ் ஆகி வருகின்றனர். அதற்கு காரணம் இன்ஸ்டாகிராம் உட்பட சமூக வலைதளங்கள் தான். அந்த வரிசையில் தற்போது சைத்ரா ரெட்டியும் இணைந்துள்ளார்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் யாரடி நீ மோகினி சீரியலில் நடித்து இருந்தார் சைத்ரா ரெட்டி. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு சீரியலிலும் நடித்து வருகிறார். ரக்கட் என்ற படத்திலும் நடித்துள்ளார். முக்கிய ரோலில் பிரபல தொலைக்காட்சி சீரியலில் நடித்து வந்த சைத்ரா, அஜித்தின் வலிமை படத்தில் போலிஸ் அதிகாரியாக நடித்திருந்தார். சமீபத்தில் தான் ராகேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

Chaitra-Reddy-updatenews360

மேலும் படிக்க: குணா குகையில் இருந்து கூட குதிச்சிடுவாங்க போல.. அருவியில் குதித்து ரசிகர்களை ஷாக் ஆக்கிய அனுஹாசன்..!(video)

இவருக்கு ஏற்கனவே ரசிகர் வட்டம் உருவாக்கியிருந்த நிலையில், சமீபமாக இன்ஸ்டாகிராமால் இளசுகளும் இவரை பின்தொடர்ந்து வருகின்றனர். இவர் போடும் போஸ்ட்டுகள் ஒவ்வொண்ணும் ஒவ்வொரு ரகம்.

Chaitra-Reddy-updatenews360

மேலும் படிக்க: மோசமான கமெண்ட்.. நச்சுனு பதில் கொடுத்த ரெடின் கிங்ஸ்லியின் மனைவி..! என்னன்னு பாருங்க?..

இந்நிலையில், சைத்ரா ரெட்டி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நள்ளிரவு ஒரு மணி அளவில் நான் எனது வேலைகளை முடித்துக் கொண்டு வீட்டிற்கு காரில் சென்று கொண்டிருந்தேன். போரூர் மேம்பாலத்தில் டிடி சோதனை நடப்பதால் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் மணிக்கு 10 கிலோமீட்டர் வேகத்தில் மெதுவாக சென்றன. நான் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது மேலே மெட்ரோ கட்டுமான பணிகளின் போது திடீரென ஒரு பெரிய சிமெண்ட் கலவை என் காரின் மீது விழுந்தது. இதன் தாக்கம் அதிர்ச்சி அளிப்பதாகவும், மிகவும் ஆபத்தானதாகவும் இருந்தது. அதிர்ஷ்டவசமாக எனக்கு ஒன்றும் ஆகவில்லை. ஆனால், நடந்து சென்றிருந்தாலோ இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாலோ என்ன ஆயிருக்கும் என அதிர்ச்சி ஆக ஒரு அவர் ஒரு பெரிய பதிவை போட்டுள்ளார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!