குக் வித் கோமாளி ஷோவில் இருந்து விலகுகிறேன்…. வெங்கடேஷ் பட் முடிவால் ரசிகர்கள் வருத்தம்!

Author: Rajesh
24 February 2024, 12:49 pm

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனவர் செஃப் வெங்கடேஷ் பட். சென்னையில் நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இவர் படிப்பில் ஆர்வம் இல்லாமல் தொடர்ந்து அடுத்தடுத்து தேர்வில் தோல்வியடைந்தார்.

அதன் பின்னர் தனக்கு பிடித்த செஃப் தொழிலை கையில் எடுத்தார். தாஜ் ஹோட்டல், தி லீலா பேலஸ் உள்ளிட்ட பெரிய ஹோட்டல்களில் பணியாற்றி இருக்கிறார். விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று புகழ் பெற்ற வெங்கடேஷ் பட் தற்போது ஒளிபரப்பாக உள்ள குக் வித் கோமாளி’ தொடரின் 5-வது சீசனில் தான் பங்கேற்வில்லை என கூறி அதிர்ச்சியளித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில்,கடந்த சில மாதங்களாக பல்வேறு சமூக ஊடக தளங்களில், குக் வித் கோமாளி சீசன் 5 புதிய சீசன் தொடங்கும் என்றும், இந்த நிகழ்ச்சியில் நான் நடுவராக இருப்பேன் என செய்திகள் வெளியிட்டு வருகின்றன. மில்லியன் கணக்கான மக்களை மகிழ்ச்சியடையச் செய்த இந்த அற்புதமான நிகழ்ச்சியிலிருந்து நான் ஓய்வு எடுக்க போகிறேன். இந்த அற்புதமான நிகழ்ச்சியை உருவாக்கி செயல்படுத்திய எனது இயக்குனர் மற்றும் நிகழ்ச்சியாளர்கள் அனைவருக்கும் நன்றி.

இந்நிகழ்ச்சி பலரது மன அழுத்தத்தை குறைக்க கூடிய ஒரு நிகழ்ச்சியாக இருந்ததை நினைத்து நான் மகிழ்ச்சியடைகிறேன். இப்படிப்பட்ட நிகழ்ச்சியில் இருந்து நான் விலகுவது, ஒரு கடினமான முடிவு தான். இருப்பினும் நான் அதில் உறுதியாக நிற்கிறேன். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளவர்கள் அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார். செஃப் வெங்கடேஷ் பட்டின் இந்த முடிவு குக் வித் கோமாளி ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!