நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய ஐகோர்ட் உத்தரவு – உண்மையென்ன?

Author: Selvan
3 March 2025, 2:09 pm

வீட்டை ஜப்தி செய்ய ஐகோர்ட் உத்தரவு

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த் தனது மனைவி அபிராமியுடன் “ஈசன் புரொடக்சன்ஸ்” என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வந்தார்.

இதையும் படியுங்க: கதற..கதற..மின்னல் வேகத்தில் ‘டிராகன்’ வசூல்..!

இந்த நிறுவனத்தின் மூலம் “ஜக ஜால கில்லாடி” திரைப்படத்தை தயாரிக்க, தனபாக்கியம் எண்டர்பிரைஸ் நிறுவனம் ரூபாய் 3.74 கோடி கடன் வழங்கியது,
இந்த கடனை 30% வட்டி உடன் திருப்பி செலுத்துவதாக துஷ்யந்த் மற்றும் அபிராமி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தனர்.ஆனால், அவர்கள் கடனை செலுத்தாததால், சென்னை உயர்நீதிமன்றம் ஓய்வு பெற்ற நீதிபதி ரவீந்திரனை மத்தியஸ்தராக நியமித்தது.

2024 மே மாதம் நீதிபதி ரவீந்திரன், கடன் தொகையை வட்டியோடு சேர்த்து ரூபாய் 9.02 கோடி செலுத்த, “ஜக ஜால கில்லாடி” படத்தின் அனைத்து உரிமைகளையும் தனபாக்கியம் எண்டர்பிரைஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்க உத்தரவிட்டார்.

ஆனால்,தயாரிப்பு தரப்பு படம் முழுமையாக முடிக்கப்படவில்லை என்று கூறியதால்,கடன் வசூலிக்க நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்யவும், ஏலத்தில் விடவும் தனபாக்கியம் நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

விசாரணையின் போது, நீதிபதி சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிட்டுள்ளார். இதனால், இந்த வழக்கின் விசாரணை 2025 மார்ச் 5 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தமிழ் திரைப்பட உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!