வைரமுத்துவை பத்தி என் கிட்டதான் கேட்கணுமா? பத்திரிக்கையாளர் மீது சீறிய சின்மயி… 

Author: Prasad
11 August 2025, 11:07 am

Me Too

வைரமுத்து தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக “Me Too” குற்றச்சாட்டு ஒன்றை சில வருடங்களுக்கு முன்பு முன்வைத்தார் பாடகி சின்மயி. பாடகி சின்மயி அவ்வாறு குற்றச்சாட்டு வைத்தது சினிமாத்துறையினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதனை தொடர்ந்து வைரமுத்துவிற்கு பாடல்கள் எழுதுவதற்கான வாய்ப்பு பெருமளவு குறைந்துப்போனது. 

ஆனால் இன்னொரு பக்கம் பாடகி சின்மயி டப்பிங் யூனியனில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவர் திரைப்படங்களில் பாடுவதற்கு மறைமுகமாக தடை விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சமீபத்தில் “தக் லைஃப்” ஆடியோ வெளியீட்டு விழாவில் சின்மயி பாடிய “முத்த மழை” பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் மீண்டும் சின்மயி பேசுப்பொருளானார்.

Chinmayi angry on journalist viral on internet

பத்திரிக்கையாளர் மீது சீறிய சின்மயி…

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு மருத்துவமனை திறப்பு  விழாவில் கலந்துகொண்ட சின்மயி பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது ஒரு பெண் பத்திரிக்கையாளர், “தேசிய விருது வழங்கப்பட்டதில் அதிருப்தி இருப்பதாக வைரமுத்து தெரிவித்திருக்கிறார். அது பற்றி உங்கள் கருத்து என்ன?” என கேள்வி எழுப்பினார். 

அப்போது சற்று கோபமான சின்மயி, “வைரமுத்துவை பற்றி என்னிடம் கேட்டேதான் ஆகவேண்டுமா? உலகத்தில் வேறு யாருமே இல்லையா வைரமுத்துவை பற்றி மட்டுந்தான் கேட்க வேண்டுமா?” என சீறினார். 

Chinmayi angry on journalist viral on internet

அதன் பின் சற்று அமைதியடைந்த சின்மயி, “நீங்கள் ஒரு பெண்ணாக இருந்துகொண்டு இப்படி கேள்வி கேட்கிறீர்கள்? இதெல்லாம் தேவையா? ஏழு வருடமாக என்னை Ban செய்திருக்கிறார்கள். அதை பற்றி ஏன் நீங்கள் கேட்கவில்லை?” எனவும் கேள்வி எழுப்பினார். சின்மயி இவ்வாறு பேசியது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!