மாட்டுக்கறி சாப்புட்டு இராமரா நடிக்கலாமா? சர்ச்சைக்குள் சிக்கிய ரன்பீர் கபூர்! சின்மயியின் தரமான பதிலடி!
Author: Prasad7 July 2025, 11:51 am
இராமராக ரன்பீர் கபூர்?
ரன்பீர் கபூர் இராமராகவும் சாய் பல்லவி சீதாவாகவும் நடித்து வரும் திரைப்படம் “இராமாயணா”. பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் இத்திரைப்படத்தில் இராவணனாக “கேஜிஎஃப்” புகழ் யாஷ் நடிக்கிறார். இத்திரைப்படத்தை நிதேஷ் திவாரி இயக்குகிறார். நமித் மல்ஹோத்ரா இத்திரைப்படத்தை தயாரிக்கிறார்.
இத்திரைப்படத்திற்கு ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் இணைந்து இசையமைக்கிறார்கள். இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இத்திரைப்படத்தின் முதல் பாகம் வருகிற 2026 ஆம் ஆண்டு தீபாவளியிலும் இரண்டாம் பாகம் 2027 ஆம் ஆண்டு தீபாவளியிலும் வெளியாகவுள்ளது.

மாட்டுக்கறி சாப்பிடுறவர் இராமரா நடிக்கலாமா?
நடிகர் ரன்பீர் கபூர் ஒரு பேட்டியில் கலந்துகொண்டபோது மாட்டிறைச்சி தனக்கு பிடித்த உணவு என கூறியிருந்தார். இந்த நிலையில் மாட்டிறைச்சி சாப்புடுபவர் இராமராக நடிப்பதா? என்று விமர்சனங்கள் எழுந்தன. ஜெய்பூர் டயலாக்ஸ் என்ற எக்ஸ் தளம், “மாட்டுக்கறி சாப்பிடுபவர் இராமராக நடிக்கிறார். பாலிவுட்டுக்கு என்ன ஆயிற்று?” என கேள்வி எழுப்பியிருந்தது.

அதற்கு பாடகி சின்மயி, “கடவுளின் பெயரை பயன்படுத்திக்கொண்டு சாமியாராக வலம் வருபவர்கள் பாலியல் வழக்கில் சிக்கினாலும் ஓட்டு வங்கிக்காக அவர்களை பரோலில் வெளியே விடுகிறார்கள், அப்படி இருக்க ஒருவர் சாப்பிடும் உணவுதான் பெரிய பிரச்சனையா?” என கேள்வி எழுப்பி பதிலடி கொடுத்துள்ளார். சின்மயியின் பதிலடிக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
A babaji who uses the name of God can be a rapist and he can keep getting parole to get votes in bhakt India – however what someone eats is a big problem. https://t.co/w7FYienmke
— Chinmayi Sripaada (@Chinmayi) July 4, 2025