கல்லூரி பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வைரமுத்து…! சின்மயி வெளியிட்ட அதிரடி தகவல் !

Author: Udayaraman
14 October 2020, 9:12 pm
Quick Share

தமிழ் திரைதுறையில் உள்ள பெண்கள் மட்டுமில்லாமல் எல்லா தரப்பு பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளுக்கு குரல் கொடுத்தவர் பாடகி சின்மயி.

இவர் பாடிய பாடல்கள் மூலம் Famous ஆனதை விட, பாடலாசிரியர் வைரமுத்து மீது MeToo புகார் கூறியதன் மூலம் பிரபலமானார். அது உண்மையா பொய்யா என்று இரண்டு வருடங்களாக பஞ்சாயத்து ஓடி கொண்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, பாடகர் கார்த்திக் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக கூட புகார் அளித்தார்.

சின்மயி அவர்களை ஆதரிக்க, ஒரு பெரிய கூட்டமே வந்தது, இருந்தும் சில நாட்கள் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்த சின்மயி, மீண்டும் வைரமுத்து மீது Me Too புகார் அளித்துள்ளார். இது குறித்து டிவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது : ”அந்த பெண்ணை எனக்கு பல ஆண்டுகளாக தெரியும். ஆனால் இதை பற்றி தனக்கு நடந்தது பற்றி என்னிடம் அவர் தெரிவிக்க இரண்டு ஆண்டுகளாகிவிட்டது. காரணம் அவரது குடும்பம், இந்த பெண் வைரமுத்துவால் பாதிக்கப்பட்ட 17வது பெண் ஆவார். அந்த பெண் அவருக்கு நடந்த விஷயத்தை தனக்கு அனுப்பிய Message-ஐ பதிவிட்டுள்ளார்.

அதில் அந்த பெண், ”நான் கல்லூரியில் படித்தபோது புத்தக வெளியீட்டு விழாவில் வைரமுத்து பங்கேற்றார். அவரிடம் ஆட்டோகிராப் கேட்டேன். அவரும் கையெழுத்திட்டதுடன் தன் அலைப்பேசி எண்ணையும் குறிப்பிட்டார். நான் கண்டுகொள்ளவில்லை.

பின்பு ஒரு டிவியில் வி.ஜே.வாக சேர்ந்தேன். அப்போது என் Phone Number-ஐ கேட்டார், நானும் யோசிக்காமல் கொடுத்துவிட்டேன். அதன்பின் பின் பலமுறை போன் செய்து தொல்லை தந்தார். சென்னை மவுண்ட் ரோடு அருகே ஒரு இடத்திற்கு வரும்படி அழைத்தார்.

ஒரு மணிநேரத்தில் 50 – 60 முறை கால் செய்தார், என்னை தேவதை என்றே வர்ணித்தார். அவரின் தொல்லை தாங்க முடியாமல் நான் வேலைபார்த்த டிவி சேனல் உதவியோடு, அவரின் மனைவியிடம் பேசி அவரை அடக்கி வைத்தோம் என தெரிவித்துள்ளார்.

Views: - 127

0

0