அஜித்தின் Blockbuster படத்தின் ரீமேக்கில் நடிக்க போகும் சிரஞ்சீவி…! என்ன படம்னு தெரியுமா ?

10 August 2020, 9:56 pm
Quick Share

வெற்றிக்கு ஷார்ட் கட் ஃபார்முலா தான் ரீமேக் படங்கள் தான். ‘பிங்க்’ படத்தின் தென்னிந்திய மொழிகளின் ரீமேக் உரிமையை பெரும் விலை கொடுத்து போனிகபூர் வாங்கினார். தமிழில் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் ‘நேர்கொண்ட பார்வை’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது.

இதன் ரீமேக்கை இயக்குநர் ஸ்ரீராம் வேணு இயக்கவுள்ளார். ஓ மை ஃபிரெண்ட், மிடில் கிளாஸ் அப்பாயி போன்ற வெற்றி படங்களை இயக்கிய ஸ்ரீராம் வேணு, பவன் கல்யாணை வைத்து தெலுங்கில் வக்கீல் சாப் என்னும் படத்தை இயக்கி கொண்டிருக்கிறார். பவன் கல்யாண் ஏற்கனவே அஜித் நடித்த வீரம் படத்தை ரீமேக் செய்து தோல்வியை கண்டார்.

தற்போது அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘வேதாளம்’. 2015-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான இந்தப் படத்தை இயக்கியிருந்தார் சிவா. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இத்திரைப்படத்தினை ஏ.எம்.ரத்னம் தயாரித்து வெளியிட்டார்.

இதன் ரீமேக் உரிமைக்கு கடும் போட்டி நிலவியது. வரும் 22-ம் தேதி சிரஞ்சீவியின் பிறந்த நாளாகும். அன்றைய தினம் ‘லூஃசிபர்’ ரீமேக் மற்றும் ‘வேதாளம்’ ரீமேக் ஆகியவை குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 0

0

0