சிரஞ்சீவியை காண 300 கிமீ சைக்கிளில் பயணம் செய்த பெண்! கனவு நினைவாகிய அழகிய தருணம்!
Author: Prasad30 August 2025, 5:21 pm
தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார்
தெலுங்கு திரையுலகில் மெகா ஸ்டாராக வலம் வருபவர் சிரஞ்சீவி. பல கோடி ரசிகர்களின் இதயங்களில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்திருக்கும் சிரஞ்சீவி எப்போதும் தனது ரசிகர்களிடம் மிகுந்த அன்பு காட்டுபவர். அந்த வகையில் தற்போது தன்னை காண வேண்டும் என்ற ஆசையோடு பல மைல் தூரம் சைக்கிள் ஓட்டிக்கொண்டு வந்த ரசிகை ஒருவரை மகிழ்ச்சியுடன் வரவேற்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

300 கிமீ சைக்கிளில் பயணித்த ரசிகை
ஆந்திராவின் ஆடோனி என்ற ஊரைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவர் தனது ஊரில் இருந்து சிரஞ்சீவியை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்ற கனவோடு சைக்கிளில் 300 கிமீ பயணித்து ஹைதராபாத் வந்துள்ளார். இவ்வாறு தனது ரசிகை ஒருவர் 300 கிமீ வரை பயணம் செய்து தன்னை பார்க்க வந்த செய்தியை அறிந்த சிரஞ்சீவி தனது ரசிகையை மகிழ்ச்சியான புன்னகையுடன் வரவேற்றார்.

தனது கனவு நிறைவேறிய உற்சாகத்தில் உலகையே மறந்த ராஜேஸ்வரி சிரஞ்சீவிக்கு ராக்கி ஒன்றை கட்டினார். சிரஞ்சீவியோ தனது ரசிகைக்கு புடவையை பரிசாக அளித்தார். மேலும் ராஜேஸ்வரியின் குழந்தைகளின் கல்வி செலவுகளையும் சிரஞ்சீவி ஏற்பதாக உறுதியளித்தார். இச்சம்பவம் ரசிகர்களின் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
