“இந்த ஒரே காரணத்துக்காக தமிழ் நடிகைகளுக்கு வாய்ப்பு தர மாட்டேங்குறாங்க” – போட்டு உடைத்த VJ சித்ரா !

27 November 2020, 12:00 pm
Quick Share

பிரபலமான சேனலான மக்கள் தொலைகாட்சியில் VJ-வாக வேலையை ஆரம்பித்த சித்து தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர்தான் சித்ரா என்னும் சித்து.

டிவியில் வரும் நிகழ்ச்சிகள், சீரியல்கள் எல்லாம் முன்பை விட எல்லா தரப்பு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அந்த வகையில் சமீப காலமாக தமிழ் சீரியல்களில் கேரளா மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த நடிகைகள் அதிக அளவில் நடித்து வருகின்றனர். இதுகுறித்து மிகவும் கோபமாக பேசியுள்ளார் நாச்சியார், பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட சீரியல் தொடர்களில் நடித்துவரும் நடிகை சித்ரா.

இது குறித்து வார இதழ் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள சித்ரா, “பல சீரியல்களில் தமிழ் பெண்களுக்கு வாய்ப்புகள் பறிக்கப்படுகின்றன. கேரளா, கர்நாடகா, என வேறு மாநில பெண்கள் வெள்ளையாக இருக்கின்றனர் என்ற ஒரே காரணத்திற்காக, தமிழ் சீரியல்களில் அவர்களை ஒப்பந்தம் செய்கின்றனர். நாங்கள் டஸ்கி நிறத்தில் இருப்பதனால், எங்களுக்கு வாய்ப்புகள் தர மறுக்கிறாங்க” என்று ஓப்பனாக போட்டு உடைத்துவிட்டார்.

Views: - 28

0

0