“சினிமா படப்பிடிப்பு தாராளமாக ஆரம்பிக்கலாம், ஆனால்..” மத்திய அரசு அறிவிப்பு !

23 August 2020, 12:15 pm
Quick Share

CORONA வைரஸினால் தற்போது தமிழில் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் சூட்டிங் இல்லாமல் அல்லாடிக் கிடக்கிறது. அதிலும் நம் கோலிவுட்டை எடுத்துக்கொண்டால் பெப்சி Unit டெய்லி வாங்கும் பேட்டா சம்பளம் கூட இல்லாமல் கையேந்தி நிற்கிறது. இதனால் பல நடிகர்கள் உதவிகள் செய்து வருகிறார்கள். சில நடிகர்கள் சம்பளத்தை கூட விட்டு கொடுக்க தயாராக இருக்கிறார்கள்.

விஜய் ஆண்டனி, ஹரிஷ் கல்யாண், இயக்குனர் ஹரி, நடிகர் உதயா என பலர் இதற்கான அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளனர். வலிமை, அண்ணாத்த, இந்தியன்2, மாநாடு உட்பட பல பெரிய படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளது.

தற்போது படப்பிடிப்புகள் தொடரலாம் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், படப்பிடிப்பில் எல்லோரும் மாஸ்க் அணிந்து இருக்க வேண்டும். உடை, உபகரணங்களை பகிர்ந்து கொள்வதை தவிர்க்க வேண்டும். என மத்திய அரசு ஸ்ட்ரிக்டாக சொல்லியிருக்கிறது இதனால் அஜீத் ரசிகர்கள் ரஜினி ரசிகர்கள் குஷியாக உள்ளனர்.

Views: - 32

0

0