இயக்குனர் ஷங்கரின் மகள் திருமணம்-வருகை தந்த முதல்வர் ஸ்டாலின் ! வைரலாகும் புகைப்படங்கள் !

Author: Udayachandran RadhaKrishnan
27 June 2021, 1:39 pm
Shankar Daughter CM Stalin - Updatenews360
Quick Share

இந்தியத் திரையுலகின் முன்னணி இயக்குனர்கள் என்று சொன்னால் விரல்விட்டு எண்ணும் வகையில் சில இயக்குனர்கள் தான் மிஞ்சுவார்கள். அதில் முக்கியமான இயக்குனர் என்று பார்த்தால் நம்ம ஊரு இயக்குனர் ஷங்கர். ஜென்டில்மேன் திரைப்படத்தில் தொடங்கி பல படங்களை இயக்கியுள்ளார். அதிக பொருட்செலவில் சிறப்பான படங்களை எடுப்பதால் இவரை பிரமாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படுகிறார்.

கடைசியாக ஷங்கர் இயக்கிய ‘2.0’ படம் நல்ல வசூல் பெற்றாலும் ‘பாகுபலி’ வசூலை நினைத்து கூட பார்க்க முடியவில்லை. தற்போது கமலை வைத்து இந்தியன் 2 எடுத்து வருகிறார். ஆனால் சில பல பிரச்சினைகள் காரணமாக படம் தாமதமாகி வருகிறது.

இந்தநிலையில், இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா ஷங்கர் – ரோஹித் தாமோதரன் திருமணம் இன்று நடைபெற்றது. கொரோனா பாதுகாப்பு கருதி மணமகன் மணமகளின் பெற்றோர் மற்றும் மிக முக்கிய சொந்தங்கள் மட்டுமே கலந்து கொண்டு நடைபெற்ற இத்திருமணத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை தந்து மணமக்களை வாழ்த்தினர்.

மேலும் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டுள்ள புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகியுள்ளது.

Views: - 663

8

0