டாடா பட சிறுவன் அந்த நடிகரின் வாரிசா.. அடேங்கப்பா.. லியோ படத்திலும் சர்ப்ரைஸ்..!

Author: Vignesh
17 March 2023, 7:45 pm

கவின், அபர்ணா தாஸ் நடிப்பில், கணேஷ் கே பாபு இயக்கத்தில் வெளியான டாடா படம் சில நாள்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியானது. டாடா படம் பலரது வரவேற்பைப் பெற்று, நீண்ட நாள்கள் கழித்து ஒரு ஃபீல் குட் படம் பார்த்த உணர்வை கொடுத்ததாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்தநிலையில், டாடா படம் வெளியாகி கவினுக்கு பெரும் திருப்புமுனையை கொடுத்து உள்ளது.

இந்த படத்தில், கவினின் மகனாக நடித்த சிறுவன் ரசிகர்களை கவர்ந்திருக்கின்றார். இந்தச் சூழலில் அந்த சிறுவன் யார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது, அந்த சிறுவன் பிரபல நடிகரான அர்ஜுனனின் மகன் என்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது.

டாடா படத்தில் நடித்துள்ள இந்த சிறுவனின் பெயர் இளன் என்றும், காதலில் சொதப்புவது எப்படி, டிக் டிக் டிக், வாயை மூடி பேசவும் உள்ளிட்ட படங்களில் காமெடியனாக நடித்த அர்ஜூனன் மகன். அது மட்டும் இல்லாமல், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் லியோ படத்தில் அர்ஜூனனின் மகளான இயல் நடித்து வருகிறார். இப்படி அடுத்தடுத்து தனது வாரிசுகளை திரைத்துறையில் இறக்கியிருக்கும் அர்ஜுனனை பார்த்து திரையுலகினர் ஆச்சரியப்பட்டு வருகின்றனர். லியோ படம் வெளியான பின் மீனாவின் மகள் போல், அர்ஜூனனின் இயல் பெரிய பெயரை பெறுவார் என்றும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?