பிளாட்பாரத்தில் இருந்த என்னை என் மனைவி தான்…. நடிகர் கொட்டாச்சி உருக்கம்!

Author:
30 September 2024, 1:12 pm

தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகர்களில் ஒருவராக பார்க்கப்பட்டு வருபவர் தான் நடிகர் கொட்டாச்சி. இவர் பல்வேறு திரைப்படங்களில் காமெடி வேடங்களிலும் குணசத்திர கதாபாத்திரங்களிலும் கூட்டத்தில் ஒரு காமெடி நடிகனாகவும் நடித்து பிரபலமான நடிகராக பார்க்கப்பட்டார்.

பல்வேறு திரைப்படங்களில் சின்ன சின்ன காமெடி வேடங்களில் நடித்து வந்த கொட்டாட்சி வடிவேலுவை விட சிறப்பாக நடித்ததாக கூறி வாய்ப்புகள் கிடைக்காமல் செய்துவிட்டார் வடிவேலு. வாய்ப்புகள் கிடைக்காமல் வெளியேற்றப்பட்டார். இதனிடையே பட வாய்ப்புகள் அவருக்கு கிடைக்காமல் போனதால் திரையுலகை விட்டு ஒதுங்கினார்.

ஆனால் கொட்டாச்சிக்கு கிடைக்காத வரவேற்பு அவரது மகள் மானஸ்விக்கு கிடைத்தது. ஆம், மகள் மானஸ்வி நயன்தாரா நடிப்பில் வெளிவந்த இமைக்கா நொடிகள் படத்தின் மூலமாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

முதல் திரைப்படத்திலேயே ஏகோபித்த ரசிகர்களின் வரவேற்பை பெற்ற மானஸ்விக்கு தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. மகளின் மூலம் தனது சினிமா கணவையும் லட்சியத்தையும் தற்போது கொட்டாச்சி அனுபவித்து வருகிறார்.

ஆம், தனக்கு கிடைக்காத அங்கீகாரமும், மதிப்பும், புகழும், பெயரும் மகளின் மூலம் தனக்கு கிடைத்ததாக பல பேட்டிகளில் கூட அவர் கூறியிருக்கிறார். அவளுக்கு நடிக்கும் வாய்ப்புகள் வந்த பிறகு எங்களது வாழ்க்கை தரமும் உயர்ந்தது என கொட்டாட்சி பல பேட்டிகளில் கூறியிருக்கிறார்.

இந்நிலையில் கொட்டாச்சி சமீபத்திய பேட்டி ஒன்றில் தன் கசப்பான வாழ்க்கை அனுபவங்களை குறித்து பகிர்ந்துக் கொண்டார். சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த சமயம் அது. அந்த சமயத்தில் எங்க அம்மா இறந்துட்டாங்க. அம்மா இறந்ததுக்கு அப்புறம் பிச்சை எடுத்தாலும் வெளியூர்ல தான் எடுக்கணும் அப்படின்னு சென்னைக்கு வந்தேன்.

இங்கு கற்பகம் ஸ்டுடியோ கிட்ட இருக்கிற பிளாட்பாரத்தில் தான் நான் படுத்துட்டு இருப்பேன். நாலு கோணிய விரிச்சு கடை போட்டு பெயிண்ட் வாங்கி நம்பர் பிளேட் எழுதுவேன். அதன் மூலம் கிடைக்கிற சிறு வருமானத்தை வச்சுதான் என்னோட வாழ்க்கையை ஓட்டிட்டு வந்தேன்.

இதையும் படியுங்கள்:பிரபலத்தின் வளைகாப்பில் கலந்துக் கொண்ட நடிகர் விஜய் – விலை உயர்ந்த கிப்ட்!

வாழ்க்கையில என்ன ஆகப் போறோம் அப்படின்னு தெரியாமல் இருந்தேன். அந்த சமயத்துல என்னோட மனைவி வந்து தான் என்னோட வாழ்க்கையே மாத்தினாங்க. இப்போ என்னுடைய மனைவி என்னுடைய மகள் தான் என்னுடைய முழு உலகம் என கொட்டாச்சி சமீபத்தில் உருக்கமாக பேசி இருக்கிறார். இதை அடுத்து அவருக்கு பலரும் ஆறுதல் கூறியும் உங்களது வாழ்க்கை சிறப்பாக அமைந்ததற்கு பாராட்டுகளையும் தெரிவித்து வருகிறார்கள்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!