அஸ்வின் பாணியில் பேட்டி கொடுத்த நடிகர் சூரி: ட்ரோல் செய்து வச்சி செய்யும் நெட்டிசன்கள்..!

Author: Rajesh
26 March 2023, 2:15 pm

வெண்ணிலா கபடி குழு, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் உள்ளிட்ட படங்களில் தனது தனித்துவமான காமெடியின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் சூரி. இப்படி தனது காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வந்த சூரி வெற்றிமாறன் இயக்கத்தில் தற்போது விடுதலை என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

soori - updatenews360

விடுதலை படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். சமீபத்தில், இப்படத்தின் டீசர் மற்றும் ஆடியோ லான்ச் நிகழ்வு நடைபெற்றது. மேலும், இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் பேட்டி என நடைபெற்று வருகிறது. அந்த வகையில், சூரியின் பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி நெட்டிசன்களால் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

பேட்டியில் பேசிய நடிகர் சூரி, “விடுதலை படத்திற்கு முன் கிட்டத்தட்ட 10 படங்களில் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால், நான் அதை நிராகரித்துவிட்டேன்” என கூறியுள்ளார். இதற்கு சிலர் சூரியை குக் வித் கோமாளி நடிகர் அஸ்வின் ஒரு பேட்டியில் இதே போல தான் பேசியிருந்தார் என கம்பேர் செய்து ட்ரோல் செய்து வருகின்றனர்.

soori

நடிகர் அஸ்வின் தான் நடித்த ‘என்ன சொல்லப் போகிறாய்’ படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியின் போது 40 கதையை கேட்டு தூங்கிவிட்டேன் என்று கூறினார். இதற்கு பலரும் இவரை சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்து பின்னர் அவர் அதற்கு மன்னிப்பு கேட்டது குறிப்பிடத்தக்கது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!