முதல்வர் மற்றும் குடும்பத்தினர் குறித்து அவதூறு; கைதாகும் பிரபல நடிகை;

Author: Sudha
22 July 2024, 1:56 pm

தெலுங்கு திரையுலக பிரபலங்கள் மீது பாலியல் புகார்களைக் கூறி அரை நிர்வாணப் போராட்டம் நடத்தி இந்தியா முழுவதும் பிரபலமானார் நடிகை ஸ்ரீரெட்டி.

தெலுங்கு நடிகர் சங்கமான மா முன்பு கடந்த 2019ஆம் ஆண்டு மேலாடை இல்லாமல் போராட்டம் செய்தார் நடிகை ஸ்ரீரெட்டி. தனக்கு பட வாய்ப்பு தருவதாக கூறி தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா துறையை சேர்ந்த சில பிரபலங்கள் பலரும் தன்னை படுக்கைக்கு பயன்படுத்திக் கொண்டு வாய்ப்பு கொடுக்காமல் ஏமாற்றிவிட்டதாக குற்றம்சாட்டினார்.

தெலுங்கு நடிகர்களான பவன் கல்யாண், நாணி மற்றும் பிரபல இயக்குநர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறிய ஸ்ரீரெட்டி தமிழ் சினிமாவில் நடிகர்கள் விஷால், லாரன்ஸ், ஸ்ரீகாந்த், இயக்குநர் ஏ ஆர்முருகதாஸ் என பலரும் தன்னை படுக்கைக்கு பயன்படுத்தியதாக கூறி புயலை கிளப்பினார். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முக்கிய பிரபலங்களின் பெயர்கள் அடிபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நடிகை ஸ்ரீ ரெட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண், தகவல் தொழில்நுட்ப மந்திரி லோகேஷ், உள்துறை மந்திரி அனிதா மற்றும் அவர்களது குடும்பத்தினர் குறித்து அவதூறு வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.அந்த வீடியோ விவகாரம் இப்போது புயலைக் கிளப்பி உள்ளது.

அவதூறு வீடியோவைக் கண்ட தெலுங்கு தேசம் கட்சியினர் ஸ்ரீ ரெட்டி மீது கடும் கோபம் அடைந்தனர்.

கர்னூலை சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சி தலைவர் நாகநாஜு என்பவர் அவதூறு வீடியோ வெளியிட்ட ஸ்ரீ ரெட்டி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என 3-வது நகர போலீசில் புகார் செய்தார்.போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமோகன் ஸ்ரீ ரெட்டி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.இந்த புகார் தொடர்பாக ஶ்ரீ ரெட்டி கைது செய்யப்படலாம் என பேசப்படுகிறது

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?