அடங்காத மீரா மிதுனுக்கு அறிவுறையா..? ‘ரைட்டு’ அடுத்த வீடியோ இவருக்குத்தான்…!

10 August 2020, 2:37 pm
Quick Share

நடிகர்கள் விஜய், சூர்யா மற்றும் அவர்களது குடும்பத்தை இகழ்ந்து பேசிய மீரா மிதுனுக்கு இயக்குனர் பாரதிராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.

சர்ச்சை பிரபலம் மீரா மிதுன் தளபதி விஜய், நடிகர் சூர்யா உள்ளிட்டோர் குறித்தும் அவர்களின் குடும்பத்தினர் குறித்தும் சமீபத்தில் தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி பேசி வீடியோ வெளியிட்டிருந்தார்.

இந்த வீடியோ சமூக வலைதள பக்கங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு கண்டனம் தெரிவித்தும், மீரா மிதுனின் நடவடிக்கைக்கு முடிவு கட்டும் விதமாகவும் விஜய், மற்றும் சூர்யா ரசிகள்கள் சமூக வலைதளங்களில் திட்டி தீர்த்தனர். மட்டும் இன்றி மீரா மிதுன் மீது, தமிழகம் முழுவதும் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டது.

தொடர்ந்து, நடிகை கஸ்தூரி, சனம் செட்டி ஆகியோரும் மீராவுக்கு அறிவுறை வழங்கினர். ஆனால், அதை கண்டுகொள்ளாத மீரா, சனம் செட்டியையும் இழிவு படுத்தி வீடியோ வெளியிட்டார்.

இந்த சூழலில், இது குறித்து இயக்குனர் பாரதிராஜா தனது குரலை உயர்த்தியுள்ளார். நடிகர்கள் விஜய், சூர்யாவையும் அவர்களது குடும்பத்தை மீரா மீதுன் இகழ்வது ஏற்கத்தக்கது அல்ல எனக்கூறிய பாரதிராஜா, அடுத்தவரைத் தூற்றிப் பழித்து அதில் கோட்டை கட்டாதீர் அது மண்கோட்டையாகத்தான் இருக்கும் என மீராவுக்கு அறிவுறை வழங்கியுள்ளார்.

மேலும், சகக்கலைஞர்களின் குடும்பத்தை அவதூறாகப் பேசியும் எந்த சங்கமும் எதிர்க்குரல் எழுப்பாதது வியப்பை அளிக்கிறது எனவும் பாரதிராஜா வினவியுள்ளார். இப்படி இருக்க, பாரதிராஜாவுக்கு சுடசுட ஒரு வீடியோவை மீரா மீதும் விரைவில் வெளியிடுவார் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

Views: - 9

0

0