இந்து மதம்னா இளக்காரமா?: நெட்டிசன்களின் சர்ச்சையில் சிக்கிய ‘மூக்குத்தி அம்மன்’…!!

16 November 2020, 8:06 pm
Quick Share

சென்னை : ‘மூக்குத்தி அம்மன்’ படம் மூலம் மதம் என்ற பெயரில் உலா வரும் போலி சாமியார்களை பற்றி வெளிச்சம் போட்டு காட்ட எண்ணிய ஆர்.ஜே.பாலாஜி, இந்து மத காட்சிகளை மட்டும் படத்தில் காண்பித்து, கிறிஸ்துவ மதம் தொடர்பான காட்சியை நீக்கியது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

ஆர்ஜே பாலாஜி, சரவணன் இயக்கத்தில், நயன்தாரா, ஆர்ஜே பாலாஜி நடித்து கடந்த வாரம் ஓடிடியில் வெளிவந்த படம் ‘மூக்குத்தி அம்மன்’. இதில் இந்து போலி சாமியார்கள் எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள் என்பதை வைத்து கதையை அமைத்திருந்தார்கள். தமிழ்நாட்டில் பரபரப்பாகப் பேசப்படும் இரண்டு இந்து சாமியார்களை மையமாக வைத்து படத்தில் ஒரு நெகட்டிவ் சாமியார் கேரக்டரை உருவாக்கி கிண்டலடித்திருந்தார்கள். இந்நிலையில் படம் ஓடிடியில் வெளியாவதற்கு முன்பு, கிறிஸ்துவ போலி மத போதகர்கள் செய்யும் விஷயத்தை வைத்து கிண்டலடித்து இப்படத்தில் இடம் பெற்ற காட்சி ஒன்றை யு-டியுபில் ‘ஸ்னீக் பீக் 2’ என வெளியிட்டிருந்தார்கள்.

அதில் மதபோதகராக இருக்கும் மனோபாலா மதப்பிரசங்க மேடையில் ‘காட் இஸ் காலிங்’ எனச் செய்யும் போலியான விஷயங்களைப் பார்த்து அம்மனாக இருக்கும் நயன்தாரா, ‘கயவர்கள் முடிவில்லா தண்டனையை அனுபவிப்பார்கள், ஜீசஸ் என்னுடைய பிரண்டுதான்’ என பேசும் வசனங்கள் இடம்பெற்றிருந்தது.

ஆனால் , படம் வெளியான பின் அந்தக் காட்சி படத்தில் இடம் பெறவில்லை. சினிமாவில் கடவுள் சம்பந்தப்பட்டு கிண்டலடிக்கும் காட்சிகளை இடம்ற்றால், அது இந்து மதம் சம்பந்தமாக மட்டுமே கிண்டலடிக்கிறார்கள் என்ற ஒரு குற்றச்சாட்டு நீண்ட காலமாக இருந்து வருகிறது.

மற்ற மதங்களில் உள்ள போலி ஆசாமிகளைக் கிண்டலடிக்க மிகவும் தயங்குகிறார்கள் என்ற பேச்சும் உண்டு. ‘ஸ்னீக் பீக்’ ஆக வெளியான காட்சியை படத்திலிருந்து படக்குழு நீக்கியது பாகுபாடான விஷயமென கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மற்ற மதங்களைப் பற்றி கிண்டலடித்தால் அம்மதத்தினரின் மத உணர்வு பாதிக்கப்படுகிறது என்றால், இந்து மதத்தைப் பற்றிக் கிண்டலடித்தால் அவர்களது மத உணர்வும் பாதிக்கப்படாதா என கேள்வி பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

கடும் சர்ச்சைகள் எழுந்ததைத் தொடர்ந்து, அந்தக் காட்சி இருந்தால்தானே சர்ச்சை எழுப்புவீர்கள் என, தற்போது யு டியூபில் இடம் பெற்றிருந்த போலி மத போதகரின் ‘ஸ்னீக் பீக் 2’ காட்சியை நீக்கிவிட்டார்கள். ஆர்ஜே பாலாஜிக்கும், படத் தயாரிப்பாளர் ஐசரி கணேஷுக்கும் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்த ஒரு முக்கிய புள்ளி போன் செய்து அந்தக் காட்சியை நீக்கும்படி சொன்னார், அதனால்தான், படத்திலிருந்தும், யு டியுபிலிருந்தும் காட்சியை நீக்கிவிட்டார்கள் என கோலிவுட்டில் இருந்து தகவல் கசிந்துள்ளது.

mukuthi amman1 - updatenews360

Views: - 53

0

0