மாலையும் கழுத்துமாக பவித்ரா மற்றும் சுதர்ஷன் – குக் வித் கோமாளி புகழ் ரசிகர்கள் அதிர்ச்சி !

5 April 2021, 8:52 pm
Quick Share

Big Boss நிகழ்ச்சியை விட விஜய் டிவியில் அதிகம் பார்க்கப்பட்ட நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளிதான். இதன் முதல் சீசனே நல்ல ஹிட். அந்த சீசனில் வனிதா விஜயகுமார் வெற்றிபெற்றார். தற்போது அதன் இரண்டாவது சீசன் பேய் ஹிட். இந்த நிகழ்ச்சியின் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது என்பது மக்களுக்கு மிக பெரிய வருத்தம்.

இந்த நிலையில் இந்த வாரம் செலபிரேட்டி வாரம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் ஒவ்வொரு குக்-களும் தங்களுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்களை அழைத்து வந்துள்ளனர்.

அப்போது இளைஞர்களின் கனவு கன்னி பவித்ராவின் குடும்ப உறவினர்கள் சென்னை வர முடியாத சூழ்நிலையில் அவர் தனது நெருங்கிய நண்பர் சுதர்சன் கோவிந்த் என்பவரை அழைத்து வந்திருந்தார். இதனால் புகழ் அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் சுதர்சன் ivargala இருவரையும் சேர்த்து வைக்கதான் வந்தேன் என்று கூறினார்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் தற்போது பவித்ரா மற்றும் சுதர்சன் கோவிந்த் ஆகிய இருவரும் மாலையும் கழுத்துமாக திருமண கோலத்தில் இருப்பது போன்ற புகைப்படம் வைரலாகி வருகிறது. இதனால் புகழ் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்த நிலையில் இந்த புகைப்படம் சமீபத்தில் நடந்த விளம்பரப் படம் ஒன்றுக்காக எடுக்கப்பட்டது என்பதும் இருவரும் இணைந்து பல விளம்பர படங்களில் நடித்து உள்ளார்கள் என்பதும் அதில் ஒன்றுதான் இந்த புகைப்படம் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

Views: - 46

5

3