குக் வித் கோமாளி 4ல் இந்த வாரம் வெளியேற போவது யார் தெரியுமா? எதிர்பார்க்காத எலிமினேஷன்: ரசிகர்கள் ஷாக்..!

Author: Vignesh
9 February 2023, 2:00 pm
Quick Share

விஜய் தொலைக்காட்சியின் பிரம்மாண்ட நிகழ்ச்சியான பிக்பாஸ் கடந்த ஜனவரி 22ம் தேதி முடிவுக்கு வந்தது. இதனை தொடர்ந்து அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி 105 நாட்கள் ஒளிபரப்பாகி இருக்கிறது.

இப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் 4வது சீசனை தொடங்கிவிட்டார்கள்.

விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகாரமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. முதல் இரண்டு சீசன்களில் வெற்றியை தொடர்ந்து மூன்றாவது சீசனும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

cook with comali - updatenews360

Cook With Comali நிகழ்ச்சியின் புரொமோவுக்கு எப்போதும் வரவேற்பு அதிகம், இதில் கோமாளிகளாக சிலர் நாம் ஏற்கெனவே பார்த்தவர்கள் உள்ளனர், இதில் புதிய கோமாளிகளும் உள்ளார்கள்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நான்காவது சீசன் வருகிற ஜனவரி 28-ந் தேதி முதல் ஒளிபரப்பானது. கடந்த சீசன்களில் கோமாளியாக வந்து கலக்கிய புகழ், குரேசி ஆகியோர் இந்த சீசனில் கலந்துகொண்டனர். புதிய கோமாளிகளாக ஜி.பி.முத்து, ஓட்டேரி சிவா, சிங்கப்பூர் தீபன், ரவீனா தாகா ஆகியோரை கோமாளிகளாக களமிறக்கி உள்ளனர்.

otteri siva-updatenews360

குக் வித் கோமாளி சீசன் 4 சமீபத்தில் துவங்கி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இரு வாரங்கள் முடிவடைந்துள்ள நிலையில், இந்த வாரம் எலிமினேஷன் சுற்று தொடங்கி உள்ளது. இந்த நிகழ்ச்சி துவங்கி மூன்றாவது வாரத்திலேயே எலிமினேஷன் வந்துள்ளதால் ரசிகர்கள் சற்று அப்செட்டில் இருந்து வருகின்றனர்.

cwc - updatenews360

இந்நிலையில், இந்த வாரம் ஷெரின், காலயன் மற்றும் கிஷோர் இவர்கள் மூவரில் ஒருவர் தான் நிகழ்ச்சியை விட்டு வெளியேற போகிறார்கள் என தகவல் வெளியாகி உள்ளது. இதில் காலயன் மற்றும் ஷெரின் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ள போட்டியாளர்களாக இருக்கும் பட்சத்தில் இயக்குனர் கிஷோர் தான் வெளியேறுவார் என்று செய்திகள் வெளியாகி வருகிறது.

Views: - 507

2

0