CWC சீசன் 5-ல் ‘இந்த’ 8 பேர் கன்ஃபார்ம்.. அப்போ சிரிப்புக்கு பஞ்சம் இருக்காது..!

Author: Vignesh
11 April 2024, 11:21 am

விஜய் டிவியின் மிகவும் பிரபலமான அனைவரையும் கவர்ந்த நிகழ்ச்சி என்று சொல்லும் அளவிற்கு பெயர் பெற்ற நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி, நான்கு சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. தற்போது, ஐந்தாம் சீசனுக்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே, நடுவர்களை அறிமுகப்படுத்தும் வகையில் பிரமோ வெளியிடப்பட்டு இருந்தது.

மேலும் படிக்க: 68 வயதில் இது தேவையா?.. பிரியாமணியை அந்த இடத்தில் தொட்ட போனி கபூர்..! Viral Video..!

அதில், தாமு மற்றும் நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் ஆகியோர் மாஸாக விமானத்தில் இருந்து இறங்கி வருவது போல் காட்டப்பட்டது. தற்போது, கோமாளிகளை அறிமுகப்படுத்தும் பிரமோ வெளியாகி இருக்கிறது. தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவின் முதலில் தொகுப்பாளராக ரக்சன் மற்றும் மணிமேகலை ஆகியோர் வருகின்றனர்.

அதன் பின்னர், குரேஷி மற்றும் சுனிதா ஆகியோர் கோமாளிகளாக அறிமுகப்படுத்தப்படுகின்றனர். அதன் பின்னர் யாரும் எதிர்பார்க்காத வகையில், விஜய் டிவியில் ராமர் வருகிறார். மேலும், யாரெல்லாம் வரப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்நிலையில், போட்டியாளர்களின் லிஸ்டில் வனிதாவின் மகள் ஜோவிகாவின் பெயர் அடிபட்டு வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் ஐயோ இந்தம்மா பிக் பாஸிலேயே அந்த போடு போட்டுச்சு இங்கேயும் வந்திருச்சா என்று கமெண்ட்களில் தெரிவித்து வருகின்றனர். மேலும், தொகுப்பாளினி பிரியங்கா, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, Youtuber இர்ஃபான், வெளிநாட்டு விவசாயி, கிருஷ்ணா மெக்கன்சி, நடிகர் விடிவி கணேஷ், நடிகை திவ்யா துரைசாமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை வசந்த், இளம் நடிகை ஷாலின் ஜோயா உள்ளிட்ட 8 போட்டியாளர்கள் குக் வித் கோமாளி 5ல் பங்கேற்றுள்ளனர் என உறுதியாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க: Vijay TV நீயா நானா பிரபலம் இரயில் மோதி பலி.. அதிர்ச்சியில் உறைந்த நெட்டிசன்கள்..!

cwc-updatenews360
  • ajith kumar talking about quit cinema in interview after lonng time சினிமாவுக்கு டாட்டா! எப்போவேணாலும் நடக்கலாம்? பேட்டியில் அதிர்ச்சியை கிளப்பிய அஜித்…