“குட் நியூஸ் சொன்ன மணிமேகலை”… CWC நிகழ்ச்சியை விட்டு வெளியேற இதுதான் காரணமா ?

Author: Vignesh
7 March 2023, 8:30 pm

கடந்த 2010ம் ஆண்டு சன்மியூசிக்கில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் என்ற நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் மணிமேகலை. பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர். இவர் ஹுசைன் என்பரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இருவீட்டாரின் எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டு தனியாக வாழ்ந்து வந்த நிலையில் தற்போது இருவீட்டாரும் ஏற்று கொண்டனர். சன்டிவியில் இருந்து 2019ம் ஆண்டு மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவியில் அறிமுகமானர்.

அதனைத் தொடர்ந்து, விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் மணிமேகலை. குக் வித் கோமாளி ஷோவில் புகழ், சிவாங்கி, சுனிதா, பாலா மணிமேகலை உள்ளிட்டோர் மக்கள் பேவரைட். இந்நிலையில் தற்போது மணிமேகலை குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தது அனைவரிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

‘கடினமான முடிவு தான். ஆனால் எடுத்தாகவேண்டிய நிலை” என அவர் கூறி இருக்கிறார். மேலும் அவர் தனது பதிவில், “இன்று குக் வித் கோமாளியில் என்னுடைய கடைசி எபிசோடு. ‘நான் வரமாட்டேன்’ என நானே வருவேன் கெட்டப்பில் அறிவிக்கிறேன் என தெரிவித்து இருந்தார்.

இதனிடையே, நிகழ்ச்சியை விட்டு மணிமேகலை விலக பலர் பலவிதமாக காரணங்களை கூறி வருகிறார்கள். அதேபோல் மணிமேகலை கர்ப்பமாக இருப்பதால் தான் நிகழ்ச்சியை விட்டு விலகிவிட்டதாகவும் செய்திகள் இணையத்தில் பரவியது.

இந்நிலையில், அவர் தற்போது சமூக வலைத்தளத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டிருக்கிறார்கள். அதில், கணவர் ஹுசைனுடன் நிலத்திற்கு பூஜை செய்யும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அதற்கு HM பண்ணை வீடு பாலக்கால் பூஜை, கடவுளின் அருளால், கடின உழைப்புடனும் எங்கள் குட்டி சாம்ராஜ்யத்தை உருவாக்கத் தொடங்கி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், கிராமத்திற்குச் செல்லும் போதெல்லாம் எங்கள் மகிழ்ச்சியான இடமாக இருக்கும் எனவும், கனவு காணுங்கள் என தலைப்பிட்டு பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தைப் பார்த்து விட்டு பலரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!