கோமாளிகளை பாராட்டிய நம்ம வீட்டுப் பிள்ளை சிவகார்த்திகேயன்!

Author: Poorni
10 January 2021, 1:29 pm
Quick Share


குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சிக்கு வந்த நடிகர் சிவகார்த்திகேயன், கோமாளி மற்றும் குக்குகளை தனக்குரிய பாணியில் பாராட்டு தெரிவித்துள்ளார்.


கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதி விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சி ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சியில், வனிதா, ரேகா, ரம்யா பாண்டியன், மோகன் வைத்தியா, உமா ரியாஷ், ஞானசுந்தரம், தாடி பாலாஜி, பிரியா ரோபோ ஷங்கர் என்று ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


இவர்களுடன் இணைந்து கோமாளிகளாக, மணிமேகலை, பாலா, புகழ், சிவாங்கி, பிஜிலி ரமேஷ், பப்பு, டைகர் தங்கதுரை, சாய் சக்தி ஆகியோர் கலந்து கொண்டர். கிட்டத்தட்ட 45 எபிசோடுகள் வரை சென்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வனிதா விஜயகுமார் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். இவரைத் தொடர்ந்து 2,3,4 ஆகிய இடங்களில் உமா ரியாஷ், ரம்யா பாண்டியன் மற்றும் ரேகா ஆகியோர் இடம்பெற்றனர்.


இந்த நிகழ்ச்சிக்கு கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து, குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. கடந்த ஆண்டு நவம்பர் 14 ஆம் தேதி இந்நிகழ்ச்சியின் முதல் எபிசோடு ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில், அஸ்வின் குமார், பாபா பாஸ்கர், கனி, பவித்ரா லட்சுமி, ஷகிலா, தர்ஷா குப்தா, தீபா சங்கர் மற்றும் மதுரை முத்து ஆகியோர் குக்குகளாக கலந்து கொண்டனர். இவர்களுடன் இணைந்து பாலா, புகழ், மணிமேகலை, பார்வதி சரண், பப்பு, சக்தி ராஜ், சரத் ராஜ், சிவாங்கி, சுனிதா கோகை மற்றும் டைகர் தங்கதுரை ஆகியோர் கோமாளிகளாக கலந்து கொண்டனர்.


ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் ஒளிபரப்பாகி வந்த இந்நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. ஏற்கனவே மதுரை முத்து, தர்ஷா குப்தா மற்றும் தீபா ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டனர். இவர்களைத் தவிர ஷகீலா, பவித்ரா லட்சுமி, கனி, பாபா பாஸ்கர், அஸ்வின் ஆகிய 5 பேர் மட்டுமே அடுத்த ரவுண்டுக்கு தகுதி பெற்றுள்ளனர்.


வேறு எந்த டிவி நிகழ்ச்சியிலும் இது போன்ற ஒரு சமையல் நிகழ்ச்சி நடந்ததே இல்லை என்று கூறும் அளவிற்கு குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி நடந்து வருகிறது. இந்த நிலையில், பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியாக இன்று ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியின் 18ஆவது எபிசோடில் நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.


அப்போது பேசிய அவர் கூறியிருப்பதாவது: ஏதாவது கிஃப்ட் ஆம்பர் பரிசு கொடுப்பாங்கன்னு பாத்தேன். ஆனால், பூங்கொத்து கொடுத்துட்டாங்க. இந்த ஷோவின் மிகப்பெரிய ரசிகன். கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். அதில், நானும் ஒருவன். முதல் சீசன்ல இருந்தே இந்த நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருக்கிறேன். குக்கிங் ஷோவை இப்படியொரு எண்டர்டைனிங்கா மாத்த முடியும் அப்படின்றது இந்தியாவுல வேறு எந்த சேனலயும் இப்படி பண்ணியிருக்காங்கலான்னு தெரியல. குக் வித் கோமாளி அப்படி என்றது படம் பார்ப்பது போன்று இருக்கிறது.

ஒவ்வொரு வாரமும் இவ்வளவு ஏன் நியூ இயர் அன்றைக்கு காலைல கூட சிரிக்கலாம் என்று ஒரு சண்டே ஒரு எபிசோடு புல்லா பார்த்து சிரித்துக் கொண்டே இருந்தேன். அதுல முட்டை எல்லாம் வச்சுக்கிட்டு எப்படி சமைப்பது என்ற எபிசோடு சூப்பர். அத பாத்து புல்லா சிரிச்சிட்டு தான் இந்த வருசத்தை ஸ்டார்ட் பண்ணுனேன்.
ஒரு ஷோ வெற்றிகரமாக இருப்பதற்கு காரணம் இயக்குநரும், தொழில்நுட்ப கலைஞர்களும் தான்.

அவர்கள் இல்லை என்றால், இந்தளவிற்கு இந்த ஷோ வந்திருக்காது. நடுவர்களாகிய நீங்களும் தான் சூப்பர். இங்க இருப்பவர்களுடன் இணைந்து நான் நிறைய படங்களில் நடிக்கவும் செய்துள்ளேன். ஒரு சிலரை அவர்களது பணிகளின் மூலமாக நான் அறிந்திருக்கிறேன்.
சிவாங்கி, பாலா, மதுரை முத்து, கனி, அஸ்வின், தீபா, ஷகீலா, தர்ஷா, சுனிதா, பாபா பாஸ்கர், ஷகிலா என்று ஒவ்வொருவரையும் அவர்களது செய்தவற்றை குறிப்பிட்டு பாராட்டு தெரிவித்துள்ளார். அதற்காகவே தான் வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இனிமேலும் நீங்கள் அனைவரையும் சிரிக்க வைத்துக் கொண்டே இருக்க வேண்டும். உங்கள் அனைவருடனும் இணைந்து படங்களில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் கண்டிப்பாக அது நடக்கும். பட ஷூட்டிங் ஸ்பாட்டில் இது போன்று கலகலப்பாக இருக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 57

0

0