வாயை மூடுடா சு*******பு… டபுள் மீனிங்கில் எல்லை மீறும் CWC நிகழ்ச்சி பிரபலங்கள்..! (Video)

Author: Vignesh
15 July 2024, 2:11 pm

விஜய் டிவியின் மிகவும் பிரபலமான அனைவரையும் கவர்ந்த நிகழ்ச்சி என்று சொல்லும் அளவிற்கு பெயர் பெற்ற நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி, நான்கு சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. தற்போது, ஐந்தாம் சீசன் நடைபெற்று வருகிறது. அதில், நடுவர்களாக தாமு மற்றும் நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் ஆகியோர் இருக்கிறார்கள். மேலும், புதிய கோமாளிகளும் களமிறக்கப்பட்டுள்ளார்கள்.

CWC

மேலும் படிக்க: முன்னாள் காதலுடன் இணைந்த ஐஸ்வர்யா ராய்?.. ராக்கெட் வேகத்தில் வைரலாகும் புகைப்படம்..!

இந்நிலையில், காமெடி என்கிற பெயரில் கோமாளிகளும் போட்டியாளர்களும் இரட்டை அர்த்தத்தில் பேசுவது தற்போது, இந்நிகழ்ச்சியின் மீது இருந்த ஒரு நல்ல அபிப்பிராயத்தை மாற்றியுள்ளது என்றே சொல்லலாம். அதிலும், சில வாரங்களுக்கு முன்னர் ராமர் ஹன்சிதாவிடம் கத்தியை கொடுடி தேவ… சீனா என்று பேசியிருப்பார். அதை ராமர் படுமோசமான கெட்ட வார்த்தையை முழுங்கியபடி பேசியதை பார்த்து பலரும் கொந்தளித்து திட்டி இருந்தனர்.

CWC

மேலும் படிக்க: சூப்பர்ஸ்டார் படத்திற்கே இந்த நிலைமையா?.. 15 ஆண்டுகளில் இல்லாத மோசமான வசூல்..!

இந்நிலையில், இந்த வாரம் ராமருக்கு ரிவென்ச் செய்யும் விதமாக ஹன்சிதா வாயை மூடுடா சுண்…ணாம்பு என்று இரட்டை அர்த்தத்தில் கெட்ட வார்த்தை பேசி இருக்கிறார். இப்படி முகம் சுளிக்க வைக்கும் படியாக இருவரும் நடந்து கொண்டதை பலரும் கண்டித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!