குக் வித் கோமாளியில் சொல்வதெல்லாம் உண்மை? வெளிவந்தது போட்டியாளர்களின் பெயர்கள்!
Author: Prasad30 April 2025, 6:33 pm
தொடங்கியது சீசன் 6
தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன் வருகிற மே 4 ஆம் தேதியில் இருந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. இதில் மாதம்பட்டி ரங்கராஜ், செஃப் தாமு, செஃப் கௌஷிக் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்கின்றனர்.

புகழ், குரேஷி, சுனிதா, ராமர், கேபிஒய் சரத் ஆகிய பிரபலமான கோமாளிகள் இந்த சீசனில் இடம்பெற்றுள்ள நிலையில் சௌந்தர்யா நஞ்சுண்டன், டாலி, சர்ஜின் குமார், பூவையார் ஆகியோர் புதிய கோமாளிகளாக இணைந்துள்ளனர். இந்த நிலையில் குக் வித் கோமாளி சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ள போட்டியாளர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி.
யார் அந்த போட்டியாளர்கள்
பிரபல நடிகையான பிரியா ராமன் இந்நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொள்ளவுள்ளார். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே தொடரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போல் லட்சுமி ராமகிருஷ்ணன் இந்நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்கிறார்.
இவர்களுடன் செம்பருத்தி சீரியல் புகழ் சாபனா சாஜஹான் போட்டியாளராக பங்கேற்கவுள்ளார்.
அதே போல் சிவகார்த்திகேயனின் “அமரன்” படத்தில் நடித்த உமைர் லத்தீஃப் இந்நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்கிறார்.
தற்போது வரை இந்த 4 போட்டியாளர்களை மட்டும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மீதி போட்டியாளர்களை மே 4 ஆம் தேதி இந்நிகழ்ச்சியில் முதல் எபிசோட்டில் அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.