அசிங்கப்படுத்தியதால் கண்கலங்கி அழுத பெண் போட்டியாளர்.. காலில் விழுந்த கூல் சுரேஷ்..!

Author: Vignesh
17 October 2023, 11:29 am

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, 7வது சீசன் பரபரப்பாக சென்றுக்கொண்டிருக்கிறது.

இதனிடையே, முதல் நாளில் இருந்தே பிக் பாஸில் நிறைய டாஸ்க் கொடுத்து போட்டியாளர்களை வறுத்தெடுத்து வருகிறார்கள். இந்த சீசன் விறுவிறுப்பின் உச்சமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அனன்யா ராவ், பவா செல்லத்துரை என இரண்டுபேர் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்கள்.

bigg boss 7 tamil-updatenews360

இதனிடையே, இன்று வந்துள்ள முதல் பிரமோவில், இதில் வீட்டில் இருக்கும் ஹவுஸ் மேட் அனைவருக்கும் ராசிபலன் கூறுகிறார் கூல் சுரேஷ். நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக என்னவோ தெரியவில்லை விசித்ரா காலில் விழுந்து கூல் சுரேஷ் ஆசிர்வாதம் பெற்றுக்கொள்கிறார்.

bigg boss 7 tamil-updatenews360

இவை அனைத்தும் நகைச்சுவையாக நடக்கிறது. இதற்கு பின்னர் ராசி பலன் கூறும்போது மறைந்திருந்து பார்க்கிறியே மாயா இந்த பக்க வாயா என்று குறிப்பிட்டும் நகைச்சுவையாக சில விஷயங்களை கூல் சுரேஷ் பேசியிருக்கிறார். இதனால் வருத்தப்படும் மாயா என்ன பற்றி நீங்க பேசுனது நிறைய விஷயங்கள் எனக்கு பிடிக்கவில்லை. எனக்கூறிவிட்டு அறைக்கு செல்கிறார். அங்கு சென்ற பின்னர் திடீர் என கண்கலங்கிய வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!