திடீர்னு உல்டா ஆகிட்டு, மட்டம் தட்டுறேன்னு சொல்றியே.. பொங்கிய கூல் சுரேஷ்..!

Author: Vignesh
18 October 2023, 5:41 pm

இந்திய தொலைக்காட்சிகளில் பல மொழிகளில் பரவலாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, அடுத்த சீசனாக பிக்பாஸ் 7 நிகழ்ச்சி துவங்கி உள்ளது.

bigg-boss-7 - updatenews360

இந்த சீசனில் கூல் சுரேஷ், அக்‌ஷயா உதயகுமார், ஐஷூ, விஜய் வர்மா, ஜோவிகா விஜயகுமார், பிரதீப் ஆண்டனி, பவா செல்லதுரை, விஷ்ணு விஜய்,அனன்யா ராவ், பூர்ணிமா ரவி, சரவண விக்ரம், வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், மாயா கிருஷ்ணா, விசித்ரா, நிக்ஸன், மணி சந்திரா, ரவீனா தாஹா என மொத்தம் 18 பேர் போட்டியாளர்களாக பங்கேற்று உள்ளனர்.

இந்த சீசனில் தான் முதல்முறையாக பிக் பாஸ், ஸ்மால் பாஸ் என இரண்டு வீடுகள் இடம்பெற்றுள்ள நிலையில், இரண்டாவது வீடு சிறைச்சாலை போன்ற விதிகளுடன் இயங்க தொடங்கியுள்ளது.

bigg boss 7

இந்தநிலையில், இன்று வெளியான மூன்றாவது பிரமோவில் ஸ்மால் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் மற்றவர்களை பற்றி கருத்துக்களை கூற வேண்டும் என ஸ்மால் பாஸ் வீட்டில் டாஸ்க் கொடுக்கப்பட்டது. அப்போது, பூர்ணிமா கூல் சுரேஷ் தாக்கி பேசினார். கூட சேர்ந்து காமெடி பண்றவங்களை.. put down பண்ணாதீங்க என பூர்ணிமா கூற அதற்கு கோபமாக கூல் சுரேஷ் அவருக்கு நோஸ்கட் கொடுத்திருக்கிறார். கூட சேர்ந்து நல்லாவே விளையாடுற அப்பறம் மட்டம் தட்டுகிறேன் என்று சொல்கிறாயே என கூல் சுரேஷ் பொங்கி இருக்கிறார்.

  • producers not accept to produce ajith kumar 64th movie அஜித்குமாரின் கண்டிஷனை கேட்டு தெறித்து ஓடும் தயாரிப்பாளர்கள்? அப்படி என்னதான் சொல்றாரு!