லியோவுக்கு ஷாக் கொடுத்த கூலி… ஒட்டுமொத்த சாதனையையும் ஓவர் டேக் செய்த சூப்பர் ஸ்டாரு…!!!
Author: Udayachandran RadhaKrishnan9 August 2025, 3:30 pm
ரஜினி நடித்துள்ள கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகிறது.லோகேஷ் கனகராஜ் இயக்கம் என்பதால் படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு.
படத்தின் பாடல்கள், டிரெய்லர் என அனைத்துமே அதிரிபுதிரி சாதனை படைத்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் படத்தின் டிக்கெட் முன்பதிவுகள் அமெரிக்கா மற்றும் ஓவர்சீஸ் நாடுகளில் தொடங்கி அதிரடி புக்கிங்ஸ் நடைப்பெறுகிறது.
வட அமெரிக்காவில் மட்டும் 50,000+ டிக்கெட்ஸ் ப்ரீமியர் ஷோவுக்கு புக் செய்யப்பட்டுள்ளது.கேரளா மற்றும் தமிழ் நாட்டில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது.
டிக்கெட் கவுண்ட்டர் முன்னாடி காலையிலேயே கூட்டம் வழிந்தது. ஒரு மணி நேரத்தில் 50,000+ டிக்கெட்ஸ் விற்பனையானது. 1 மணி நேரத்தில் 50 ஆயிரத்திற்க்கும் மேல் டிக்கெட் புக் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கர்நாடகாவில் இன்று காலை டிக்கெட் புக்கிங் ஓப்பன் ஆனதும், 37 நிமிடத்தில் 10,000+ டிக்கெட்ஸ் விற்பனையாகியுள்ளது.
37 நிமிடங்களில் 10 ஆயிரத்திற்கும் மேல் டிக்கெட் புக் செய்யப்பட்டது.
இதற்கு முன் அதிக முன்பதிவு செய்த படமாக இருந்த கே.ஜி.எஃப் 2 மற்றும் லியோ படங்களின் சாதனையை கூலி முறியடித்துள்ளது. இப்படம் முன்பதிவுகளில் மட்டுமே பல கோடிகள் வசூல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
